ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் இரண்டு போட்டிகள் அக்டோபர் 10 செவ்வாய் அன்று அதாவது இன்று நடைபெறுகிறது. முதல் போட்டி இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகிறது. இரண்டாவது போட்டியானது பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. 


பாகிஸ்தான் தனது முதல் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக விளையாடியது. அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், எதிர்பார்த்தபடி பாகிஸ்தான் அணிகள் சிறப்பாக செயல்பட்டதா என்றால் சந்தேகம்தான். முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும், இரண்டாவது போட்டிக்கு முன்னதாக அந்த அணிக்கு பல பிரச்சனைகள் உள்ளன, இதனால் அந்த அணி தனது இரண்டாவது போட்டியில் தோல்வியடையலாம்.  மறுபுறம், இலங்கை அணி தனது முதல் போட்டியில் தென்னாபிரிக்காவிடம் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இலங்கை பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அவர்களின் போராட்டம் வெற்றிக்கு போதுமானதாக இல்லை என்றே கூறலாம். 


முதல் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.


நெதர்லாந்து போன்ற பலவீனமான அணிக்கு எதிராக கூட பாகிஸ்தானால் 50 ஓவர்கள் முழுமையாக விளையாட முடியவில்லை. அந்த அணி 49 ஓவரில் 286 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரன்களை விரட்டிய நெதர்லாந்து அணி 205 ரன்களை எட்டியது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அந்த அணிக்கு பெரிய பலம் இல்லை. 


இப்படிப்பட்ட நிலையில் இன்று ஆசியாவின் இந்த இரண்டு பெரிய அணிகளுக்கு இடையேயான போட்டி எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆசியக் கோப்பையின் சூப்பர்-4 சுற்றுப் போட்டியின் போது இலங்கை - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் கடைசியாக சந்தித்தனர். இந்தப் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.


பாகிஸ்தான் vs இலங்கை: நேருக்கு நேர்


பாகிஸ்தான் மற்றும் இலங்கை இவ்விரு அணிகளுக்கிடையில் இதுவரை 156 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளது. இதில், பாகிஸ்தான் அதிகபட்சமாக 92 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கத்தில் உள்ளது.  இலங்கை 59 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, பதிவுகளின்படி, பாகிஸ்தானிம் கை ஓங்கி இருக்கிறது. 


பிட்ச் அறிக்கை: 


ஹைதராபாத் ஆடுகளம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளமாகவே இருந்துள்ளது. இங்கு நடந்த கடந்த ஐந்து ஆட்டங்களில் இந்த ஆடுகளத்தில் சராசரி ஸ்கோர் 296 ஆக இருக்கிறது. அதன் அடிப்படையில், இன்றும் இரு அணிகளும் அதிக ஸ்கோரிங் செய்யலாம். இந்த ஆடுகளத்தில் டாஸ் வென்ற அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யலாம். 


கணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி: 


இமாம்-உல்-ஹக், ஃபகார் ஜமான், பாபர் ஆசம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவூப்.


கணிக்கப்பட்ட இலங்கை அணி: 


பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (வி.கே), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய் டி சில்வா, தசுன் ஷனக (கேப்டன்), துனித் வெலலெஜ், மதிஷ பத்திரன, டில்ஷான் மதுஷங்க மற்றும் கசுன் ராஜித.