கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய ஐ.சி.சி. உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இதுவரை 5 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.


நியூசிலாந்து - நெதர்லாந்து:


6 வது லீக் போட்டி இன்று (அக்டோபர் 9) ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் தற்போது முதல் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியும், எட்டாவது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணியும் விளையாடி  வருகிறது. 


அதன்படி, இன்றைய போட்டி சரியாக 2 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டெவோன் கான்வே மற்றும் வில் யங் ஆகியோர் களமிறங்கினர்.


322 ரன்கள் டார்கெட்:


12.1 ஓவர்கள் வரை களத்தில் நின்ற இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அப்போது, வான் டெர் மெர்வே பந்து வீச்சில் டெவோன் கான்வே விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர், களமிறங்கிய ரச்சின் ரவீந்திரன் வில் யங் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக தங்களது ஆட்டத்தை வெளிபடுத்தினர். இவர்ளது ஜோடி 144 ரன்களின் பிரிந்தது.  அப்போது களம் இறங்கிய டேரில் மிட்செல் 47 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உட்பட 47 ரன்கள் எடுத்தார்.


மறுபுறம் ரச்சின் ரவீந்திரன் 51 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 51 ரன்கள் எடுத்து வான் டெர் மெர்வே பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து நடையை கட்டினார். பின்னர் வந்த நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம்  46 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இவ்வாறாக 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 322 ரன்கள் எடுத்தது.


வெற்றி இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து:


323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி  நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விக்ரம்ஜித் சிங் மற்றும் மேக்ஸ் ஓ'டவுட் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 


அரைசதம் அடித்த கொலின் அக்கர்மேன்:


பின்னர் களமிறங்கிய கொலின் அக்கர்மேன் தன்னுடைய அதிரடியை வெளிபடுத்தினார். அதன்படி, 73 பந்துகளில் 5 பவுண்டரிகள் உட்பட69 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக  பாஸ் டி லீடே 18 ரன்கள் , தேஜா நிடமானுரு 21 ரன்கள்,  நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 30 ரன்களுடன் நடையை கட்டினர். 


இவ்வாறாக நியூசிலாந்து அணி 46.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 


புள்ளிபட்டியலில் நியூசிலாந்து ஆதிக்கம்:


அதன்படி, 99 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. தற்போது புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.


மேலும் படிக்க: ODI World Cup 2023: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு காவி ஜெர்சியா? பி.சி.சி.ஐ. சொன்ன பதில் இதுதான்!


 


மேலும் படிக்க: