ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டு, இரண்டாவது வாரம் தொடங்கியது. இதன்பிறகு, இன்னும் உலகக் கோப்பை சுவாரஸ்யமாக இருக்கும் என்று ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இன்று, செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 10, 2023, இரண்டு உலகக் கோப்பை போட்டிகள் விளையாடப்பட இருக்கிறது.
இந்த உலகக் கோப்பை போட்டியின் 7வது ஆட்டம் தரம்ஷாலாவில் உள்ள ஹெச்பிசிஏ மைதானத்தில் வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. உலகக் கோப்பையில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இது இரண்டாவது போட்டியாகும். போட்டியின் முதல் போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்தது. முதல் போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றது.
அகமதாபாத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் வெற்றி பெற்றது.
எனவே, இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி எப்படியாவது வெற்றியை கைப்பற்றி ஆக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கும்.
இங்கிலாந்து - வங்கதேசம் இதுவரை நேருக்குநேர்:
இங்கிலாந்து - வங்கதேசம் அணிகள் இதுவரை ஒருநாள் போட்டியில் 24 முறை நேருக்குநேர் சந்தித்துள்ளன. அதில், அதிகபட்சமாக இங்கிலாந்து 19 போட்டிகளில் வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. வங்கதேசம் 5 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது. ஆக, இன்றைய போட்டியிலும் இங்கிலாந்து அணியின் கையே ஓங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
பிட்ச் அறிக்கை:
இங்கிலாந்து - வங்கதேசம் போட்டி நடைபெறும் தரம்ஷாலா ஆடுகளம் பொதுவாக பேட்டிங் பிட்சாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் கடந்த போட்டியில் வங்கதேச பந்துவீச்சாளர்கள் ஆப்கானிஸ்தானை மிகக் குறைந்த ஸ்கோரில் ஆல்-அவுட் செய்ததைக் கண்டோம். அதாவது இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்த ஆடுகளத்தில் டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யலாம்.
டிவியில் நேரலையில் பார்ப்பது எப்படி?
இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதும் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மூலம் இந்தியாவில் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இலவசமாக நேரலை பார்ப்பது எப்படி?
இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மூலம் இலவசமாக நேரடியாக ஒளிபரப்பப்படும். மொபைல் பயனர்கள் போட்டியின் நேரடி ஒளிபரப்பை இலவசமாகப் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணி:
ஜோஸ் பட்லர் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மாலன், அடில் ரஷித், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.
உலகக் கோப்பைக்கான வங்கதேசம் அணி:
ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), நஸ்முல் ஹுசைன் சாண்டோ, ஹசன் மஹ்மூத், லிட்டன் தாஸ், மெஹ்தி ஹசன், மஹ்முதுல்லா, மெஹ்தி ஹசன் மிராஜ், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), முஸ்தாபிசுர் ரஹ்மான், நசும் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், தஞ்சீத் ஹசன், தஞ்சீம் ஹசன் அஹெத், தஸ்கின் அஹ்மத் .