ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை 2023 போட்டியானது தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், இந்த போட்டிக்கான அதிகாரப்பூர்வ ஆன்த்தம் சாங் ‘தில் ஜாஷ்ன் போலே’ வெளியானது. இந்த பாடலை பிரபல இசையமைப்பாளரான ப்ரீதம் இசைமைக்க, இதில், ரன்வீர் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் வலம் வருகிறார்.
இந்த ஆன்த்தம் சாங் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஒரு நாள் எக்ஸ்பிரஸில் இந்தியா முழுவதும் ஒரு காவியப் பயணத்திற்கு அழைத்து சென்று போட்டியை ரசிகர்கள் எவ்வாறு காண்கிறார்கள் என்று காட்டுகிறது.
இந்த ஆன்த்தம் சாங்கை Spotify, Apple Music, Gaana, Hungama, Resso, Wynk, Amazon Facebook, Instagram மற்றும் YouTube போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களில் 'தில் ஜாஷ்ன் போலே' பாடலை கேட்டு மகிழலாம். அதேபோல், வானொலி நிலையங்களான பிக் எஃப்எம் மற்றும் ரெட் எஃப்எம் ஆகியவற்றில் ரசிகர்கள் இந்த பாடலை கேட்கலாம்.
ஆன்த்தம் சாங் விவரம்:
இசை - ப்ரீதம்
பாடல் வரிகள் - ஷ்லோக் லால், சாவேரி வர்மா
பாடகர்கள் - ப்ரீதம், நகாஷ் அஜீஸ், ஸ்ரீராம சந்திரா, அமித் மிஸ்ரா, ஜோனிதா காந்தி, ஆகாசா, சரண்
ராப் எழுதியவர் - சரண்
ஆன்த்தம் சாங் வெளியீட்டு விழா குறித்து பேசிய ரன்வீர் சிங், "ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குடும்பத்தின் ஒரு பகுதியாகவும், தீவிர கிரிக்கெட் ரசிகராகவும், 2023 ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்த கீதம் வெளியீட்டில் ஒரு பகுதியாக இருப்பது உண்மையிலேயே ஒரு மரியாதை. இது ஒரு கொண்டாட்டம். நாம் அனைவரும் விரும்பும் விளையாட்டு” என தெரிவித்தார்.
இசையமைப்பாளர் ப்ரீதம் இதுகுறித்து கூறுகையில், “ இந்த கிரிக்கெட் போட்டியானது இந்தியாவில் மிகப்பெரிய ஆர்வத்தை தூண்டியுள்ளது. இதுவரை இல்லாத அளவில் இந்த மிகப்பெரிய உலகக் கோப்பைக்காக போட்டிக்காக'தில் ஜாஷ்ன் போலே' இசையமைத்தது எனக்கு மிகப்பெரிய கவுரவமாக உள்ளது. இந்த பாடல் 1.4 பில்லியன் இந்திய ரசிகர்களுக்கு மட்டுமல்ல, முழு உலகமும் இந்தியாவுக்கு வர வேண்டும் மற்றும் மிகப்பெரிய கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது” என்றார்.
உலகக் கோப்பையில் இந்திய அணி அட்டவணை:
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8 ஆம் தேதி எதிர்கொள்கிறது. இந்த இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான இந்த ஆட்டம் சென்னையில் நடைபெறுகிறது. இதன் பின்னர் இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தானையும், மூன்றாவது போட்டியில் பாகிஸ்தானையும் எதிர்கொள்கிறது. அடுத்து வங்கதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 அணிகளுடன் இந்திய அணி விளையாடவுள்ளது.
உலகக் கோப்பைக்கான இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ்.