அப்பப்பா.. 2023ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடரை இந்தியா நடத்த திட்டமிட்டது தொடங்கி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் மற்றும் சர்வதேச கிரிக்கெட் சம்மேளமும் மாறி மாறி அப்டேட்டுகளை விட்டுக்கொண்டு உள்ளன. குறிப்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தொடரை நடத்த திட்டமிட்டுள்ள மைதானங்களுக்கு தலா ரூ 50 கோடி நிதியை அளித்து மேம்படுத்தக் கூறியது தொடங்கி, போட்டிக்கு உலகம் முழுவதும் இருந்து ரசிகர்களை வரவழைக்க வேண்டும் என்ற நோக்கில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் விற்பனை செய்வது தொடர்பான ஒப்பந்தங்கள் வரை உலகக்கோப்பைக்கான ஏற்பாடுகள் மின்னல் வேகத்தில் நடைபெறவுள்ளன.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் ஒன்றரை மாதங்கள் இருந்தாலும் இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் தயாராவதை விட போட்டிகளைக் காண உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களைக் கவரும் வகையில் ஐசிசி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு முதல் ஐசிசி மற்றும் பிசிசிஐ என இரண்டு கிரிக்கெட் வாரியமும் மாறி மாறி அப்டேட்டுகளை விட்டுக்கொண்டு ரசிகர்களை உலகக்கோப்பை தொடர் குறித்து முணுமுணுக்க வைத்துக்கொண்டே உள்ளனர்.
ஏற்கனவே ஐசிசி உலகக்கோப்பையை விண்வெளியில் அறிமுகம் செய்தது, இதையடுத்து பிசிசிஐ இம்முறை உலகக்கோப்பை போட்டிகள் நடத்தத்திட்டமிட்டுள்ள 12 மைதானங்களுக்கும் தலா 50 கோடி ரூபாய் மேம்பாட்டு செலவிற்காக ஒதுக்கியது. இதற்கான பணிகள் 12 மைதானங்களிலும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு உள்ளது. இதனால் ஐபிஎல் தொடருக்குப் பின்னர் தொடங்கி ஆசிய கோப்பை முடியும் வரை அதாவது உலககோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் தொடரும் வரை இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட்டுகள் நடத்துவதை பிசிசிஐ தவிர்த்தது. மேலும், உள்ளூர் போட்டிகளை மற்ற மைதானங்களில் நடத்தவும் பரிந்துரைத்தது. உலகக் கோப்பை தொடருக்கு இம்முறை மொத்தம் 10 நாடுகள் களமிறங்குகின்றன.
ஐசிசி தரப்பில் உலககோப்பை தொடரை கிரிக்கெட் இன்னும் பிரபலமாகாத மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களையும் இந்த தொடரில் ரசிகர்களாக இணைக்க வேண்டும் என்ற நோக்குடனும் மேலும், அந்த நாடுகளையும் கிரிக்கெட் விளையாடத் தூண்டவேண்டும் என்ற எண்ணத்துடன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்திய அணி இம்முறை கோப்பையை வென்று மூன்றாவது முறையாக உலகக்கோப்பையில் தனது பெயரை பதிவு செய்யவேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் தொடங்கி ரசிகர்கள் வரை அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு உள்ளனர்.
ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, விராட் கோலி, ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன் மற்றும் அக்சர் படேல்.