ஆசியக் கோப்பை 2023 தொடக்கப் போட்டிக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) பாகிஸ்தான் ஆசியக் கோப்பை 2023 அணியில் கடைசி நேரத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கும் இந்தப் தொடருக்கான 17 பேர் கொண்ட  பாகிஸ்தான் அணியில் நம்பிக்கைக்குரிய மிடில் ஆர்டர் பேட்டர் சவுத் ஷகீலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சேர்த்துள்ளது.


ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், பாகிஸ்தான் தனது ஆசியக் கோப்பை 2023 அணியில் சவுத் ஷகீலைத் தேர்ந்தெடுத்தது. இதற்கிடையில், தயாப் தாஹிர் ஸ்டெண்ட்-பை- வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


மேற்கூறிய இரண்டு வீரர்களும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு எதிரான  பாகிஸ்தான் அணியின் ஒரு பகுதியாக இருந்தனர். சிறப்பான வீரர்களாக கருத்தப்படும் இவர்களால் போதுமான விளையாட்டு ஆஃப்கானிஸ்தான் தொடரில் போதுமான வாய்ப்பை பெற முடியவில்லை. 


இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சவுத் ஷகீலுக்கு, இது ஒரு சிறந்த வாய்ப்பினை வழங்கியுள்ளது. ஆரம்பத்தில், அவர் ஆசிய கோப்பை 2023க்கான 17 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்படவில்லை. ஷகீலைச் சேர்த்ததன் மூலம், பாகிஸ்தான் தனது மிடில் ஆர்டரை பலப்படுத்தியுள்ளது. மேலும் இதன்மூலம் பாகிஸ்தான் அணியில் 18 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 




பாகிஸ்தான் அணி:  பாபர் அசாம் (கேப்டன்), ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக், சல்மான் அலி ஆகா, அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், முகமது ஹாரிஸ், ஷதாப் கான், இப்திகார் அகமது, உசாமா மிர், ஃபஹீம் அஷ்ரப், ஹாரிஸ் ரவூப், முகமது நவாஸ், நசீம் ஷா, ஷஹீன் அப்ரிடி, சவுத் ஷகீல், முகமது வாசிம் ஜூனியர், தயப் தாஹிர் (ஸ்டாண்ட் -பை வீரர்).


ஆசியக் கோப்பை 2023 தொடக்க ஆட்டத்தில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முல்தானில் நேபாளத்திற்கு எதிராக பாகிஸ்தான் களமிறங்க உள்ளது. ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 17 வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், செப்டம்பர் 2ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.


குறிப்பிடத்தக்க வகையில், 2023 ஆசிய கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் பலமுறை மோத வாய்ப்புள்ளது. இரு அணிகளுக்கும் எல்லாம் சரியாக நடந்தால், ஒரே ஆசிய கோப்பை போட்டியில் மூன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனைத்தான் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்காக  ஆண்டுக்கணக்கில் காத்துக்கொண்டு இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.