உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது முதலே சமூக ஊடகங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் எந்த ஒரு ஆஃப் ஸ்பின்னர்களும் இடம் பெறவில்லை. 


உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரவிசந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல் போன்ற வலது கை சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெறவில்லை. இந்திய அணியில் இந்த வீரர்கள் இல்லாதது உலகக் கோப்பையில் சிக்கலாக இருக்கும் என கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.


ரவிசந்திரன் அஸ்வின் இல்லாதது ஏன்..? 


எதிரணி அணியில் இடது கை பேட்ஸ்மேன் ஒருவர் இருந்தால், அவருக்கு குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் சிறந்த தேர்வாக இருப்பார்களா? உண்மையில், புள்ளி விவரங்கள் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆஃப் ஸ்பின்னர் ரவி அஷ்வின் சாதனை சிறப்பாக உள்ளது. ஆனால் இது இருந்தபோதிலும், ரவி அஸ்வின் உலகக் கோப்பை அணிக்காக புறக்கணிக்கப்பட்டார்.


யுஸ்வேந்திர சாஹல்..? 


ஒருநாள் உலகக் கோப்பை 2023 க்கான அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் , குல்தீப் யாதவ் மட்டுமே முக்கிய சுழற்பந்து வீச்சாளராக வாய்ப்பு பெற்றுள்ளார். நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேலுக்கும் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கு முன்பு கூட யுஸ்வேந்திர சாஹல் ஆசிய கோப்பையில் அணியில் இடம் பெறவில்லை. இதுவே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


கடந்த நான்கு ஆண்டுகளில், குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளனர். அதன்படி, குல்தீப் யாதவ் 33.04 சராசரியில் 45 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல், சாஹல் 28.80 சராசரியில் 36 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். விக்கெட்டுகளைத் தவிர, குல்தீப் பேட்டிங்கிலும் அணிக்கு பங்களிக்கும் திறன் கொண்டவராக பார்க்கப்படுகிறார்.


அணியில் பேட்டிங்கை வலுபடுத்தவே, குல்தீப் யாதவுடன் ஆல்ரவுண்டர் அக்சர் படேலும் பரிசீலிக்கப்பட்டுள்ளார். சாஹலின் பலவீனமான பேட்டிங் பக்கமும் அவர் அணியில் இருந்து விலகி இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில், ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்திய இந்திய அணி, முகமது ஷமிக்கு பதிலாக ஷர்துல் தாக்கூரை சேர்த்தது. இதுவே சர்ச்சையை கிளப்பியது. 


இதுவரை சாஹல் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 72 ஒருநாள் மற்றும் 80 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டியில் அவர் 121 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 96 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். குல்தீப் இந்தியாவுக்காக 8 டெஸ்ட், 86 ஒருநாள் மற்றும் 32 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் டெஸ்டில் 34 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 141 விக்கெட்டுகளையும், டி20 சர்வதேசப் போட்டிகளில் 52 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 


2023 உலகக் கோப்பைக்கான இந்திய அணி : சுப்மன் கில், ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா , குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது சிராஜ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர்.