இந்த ஆண்டின் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டியான ஒருநாள் உலகக்கோப்பை நாளை முதல் இந்தியாவில் பிரமாண்டமாக தொடங்குகிறது. 2019 ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியாளர்களான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அக்டோபர் 5ம் தேதி முதல் போட்டியில் மோதுகின்றன.
இந்தியாவில் உள்ள 10 ஸ்டேடியங்களில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெறுகிறது. இதில், முதல் மற்றும் கடைசி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இந்தநிலையில், உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் 10 ஸ்டேடியங்கள் பற்றிய புள்ளி விவரங்களை இங்கே காணலாம்.
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை நடத்தும் 10 மைதானங்கள் எவை?
- நரேந்திரமோடி கிரிக்கெட் ஸ்டேடியம் (அகமதாபாத்)
- ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கம் (ஹைதராபாத்)
- இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியம் (தர்மசாலா)
- அருண் ஜெட்லி ஸ்டேடியம் (டெல்லி)
- எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் (சென்னை)
- ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம் (லக்னோ)
- மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம் (புனே)
- எம் சின்னசாமி ஸ்டேடியம் (பெங்களூரு)
- வான்கடே ஸ்டேடியம் (மும்பை)
- ஈடன் கார்டன்ஸ் (கொல்கத்தா).
நரேந்திர மோடி ஸ்டேடியம் ஒருநாள் போட்டி புள்ளிவிவரங்கள்:
- விளையாடிய மொத்த ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை: 28
- முதலில் பேட்டிங் செய்த அணி வென்ற போட்டிகள்: 16
- முதலில் பந்துவீசிய அணி வென்ற போட்டிகள்: 12
- சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்கள்: 235
- சராசரி 2வது இன்னிங்ஸ் ஸ்கோர்கள்: 203
- அதிகபட்ச ஸ்கோர்: 2010ல் இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 365 ரன்கள் குவித்தது.
- குறைந்த ஸ்கோர்: 2006ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 85 ரன்களில் சுருண்டது.
ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தின் ஒருநாள் போட்டி புள்ளிவிவரங்கள்:
- விளையாடிய மொத்த ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை: 7
- முதலில் பேட்டிங் செய்த அணி வென்ற போட்டிகள்: 4
- முதலில் பந்துவீசிய அணி வென்ற போட்டிகள்: 3
- சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்கள்: 288
- சராசரி 2வது இன்னிங்ஸ் ஸ்கோர்கள்: 262
- அதிகபட்ச ஸ்கோர்: 2009ல் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 350 ரன்கள் எடுத்தது.
- குறைந்த ஸ்கோர்: 2011ல் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 174 ரன்களுக்குள் சுருண்டது.
ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் ஸ்டேடியம் புள்ளிவிவரங்கள்:
- விளையாடிய மொத்த ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை: 4
- முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்ற போட்டிகள்: 1
- முதலில் பந்துவீசிய அணி வென்ற போட்டிகள்: 3
- சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்கள்: 214
- சராசரி 2வது இன்னிங்ஸ் ஸ்கோர்கள்: 201
- அதிகபட்ச ஸ்கோர்கள்: 2014ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்தது.
- குறைந்த ஸ்கோர்கள்: 2017ல் இலங்கைக்கு எதிராக இந்தியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 112 ரன்களுக்குள் சுருண்டது.
இந்த மைதானத்தில் நான்கு போட்டிகள் மட்டுமே நடைபெற்றிருந்தாலும், இந்த மைதானத்தில் ரன் குவிப்பது கடினமான பணியாக இருக்கும் என்று புள்ளிவிவரங்கள் தெளிவாக தெரிவிக்கின்றன.
அருண் ஜெட்லி ஸ்டேடியம் புள்ளிவிவரங்கள்:
- விளையாடிய மொத்த ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை: 28
- முதலில் பேட்டிங் செய்த அணி வென்ற போட்டிகள்: 13
- முதலில் பந்துவீசிய அணி வென்ற போட்டிகள்: 14
- சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்கள்: 223
- சராசரி 2வது இன்னிங்ஸ் ஸ்கோர்கள்: 203
- அதிகபட்ச ஸ்கோர்கள்: 2011ல் நெதர்லாந்திற்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்தது.
- குறைந்த ஸ்கோர்கள்: 2022 இல் இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்களை இழந்து 99 ரன்களுக்குள் சுருண்டது.
எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தின் புள்ளிவிவரங்கள்:
- விளையாடிய மொத்த ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை: 34
- முதலில் பேட்டிங் செய்த அணி வென்ற போட்டிகள்: 17
- முதலில் பந்துவீசிய அணி வென்ற போட்டிகள்: 16
- சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்கள்: 224
- சராசரி 2வது இன்னிங்ஸ் ஸ்கோர்கள்: 205
- அதிகபட்ச ஸ்கோர்கள்: 2007ல் ஆப்பிரிக்கா XIக்கு எதிராக ஆசியா XI அணி 7 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது.
- குறைந்த ஸ்கோர்கள்: 2011ல் நியூசிலாந்துக்கு எதிராக கென்யா அணி 69 ரன்களுக்குள் சுருண்டது.
BRSABV எகானா ஸ்டேடியம் புள்ளிவிவரங்கள்:
- விளையாடிய மொத்த ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை: 9
- முதலில் பேட்டிங் செய்த அணி வென்ற போட்டிகள்: 2
- முதலில் பந்துவீசிய அணி வென்ற போட்டிகள்: 7
- சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்கள்: 219
- சராசரி 2வது இன்னிங்ஸ் ஸ்கோர்கள்: 212
- அதிகபட்ச ஸ்கோர்கள்: 2021 இல் இந்தியப் பெண்களுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பெண்கள் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் குவித்தது.
- குறைந்த ஸ்கோர்கள்: 2021ல் இந்தியப் பெண்களுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பெண்கள் 157 ரன்களுக்குள் சுருண்டது.
MCA சர்வதேச ஸ்டேடியம் புள்ளிவிவரங்கள்:
- விளையாடிய மொத்த ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை: 7
- முதலில் பேட்டிங் செய்த அணி வென்ற போட்டிகள்: 4
- முதலில் பந்துவீசிய அணி வென்ற போட்டிகள்: 3
- சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்கள்: 307
- சராசரி 2வது இன்னிங்ஸ் ஸ்கோர்கள்: 281
- அதிகபட்ச ஸ்கோர்கள்: 2016ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்தது.
- குறைந்த ஸ்கோர்கள்: 2013ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 232 ரன்களுக்குள் சுருண்டது.
சின்னசாமி ஸ்டேடியத்தின் புள்ளிவிவரங்கள்:
- விளையாடிய மொத்த ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை: 38
- முதலில் பேட்டிங் செய்த அணி வென்ற போட்டிகள்: 14
- முதலில் பந்துவீசிய அணி வென்ற போட்டிகள்: 20
- சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்கள்: 232
- சராசரி 2வது இன்னிங்ஸ் ஸ்கோர்கள்: 215
- அதிகபட்ச ஸ்கோர்கள்: 2013ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 383 ரன்கள் குவித்தது.
- குறைந்த ஸ்கோர்கள்: 2014ல் தென்னாப்பிரிக்கா பெண்களுக்கு எதிராக இந்திய பெண்கள் அணி 114 ரன்களுக்குள் சுருண்டது.
வான்கடே ஸ்டேடியம் புள்ளிவிவரங்கள்:
- விளையாடிய மொத்த ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை: 29
- முதலில் பேட்டிங் செய்த அணி வென்ற போட்டிகள்: 14
- முதலில் பந்துவீசிய அணி வென்ற போட்டிகள்: 15
- சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்கள்: 234
- சராசரி 2வது இன்னிங்ஸ் ஸ்கோர்கள்: 201
- அதிகபட்ச ஸ்கோர்கள்: 2015 இல் இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 438 ரன்கள் குவித்தது.
- குறைந்த ஸ்கோர்கள்: 2012ல் ஆஸ்திரேலியா பெண்களுக்கு எதிராக இந்திய பெண்கள் அணி 79 ரன்களுக்குள் சுருண்டது.
ஈடன் கார்டன் புள்ளிவிவரங்கள்:
- விளையாடிய மொத்த ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை: 35
- முதலில் பேட்டிங் செய்த அணி வென்ற போட்டிகள்: 20
- முதலில் பந்துவீசிய அணி வென்ற போட்டிகள்: 14
- சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்கள்: 241
- சராசரி 2வது இன்னிங்ஸ் ஸ்கோர்கள்: 203
- அதிகபட்ச ஸ்கோர்கள்: 2014ல் இலங்கைக்கு எதிராக இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 404 ரன்கள் குவித்தது.
- குறைந்த ஸ்கோர்கள்: 1977ல் இங்கிலாந்து பெண்களுக்கு எதிராக இந்திய பெண்கள் அணி 63 ரன்களுக்குள் சுருண்டது.
பெரும்பாலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள 10 ஸ்டேடியங்களில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.