ODI WC 2023 Opening Ceremony:  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் ஒன்றரை மாதங்கள் இருந்தாலும் இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் தயாராவதை விட போட்டிகளைக் காண உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களைக் கவரும் வகையில் ஐசிசி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு முதல் ஐசிசி மற்றும் பிசிசிஐ என இரண்டு கிரிக்கெட் வாரியமும் மாறி மாறி அப்டேட்டுகளை விட்டுக்கொண்டு ரசிகர்களை உலகக்கோப்பை தொடர் குறித்து முணுமுணுக்க வைத்துக்கொண்டே உள்ளனர். 


ஏற்கனவே ஐசிசி உலகக்கோப்பையை விண்வெளியில் அறிமுகம் செய்தது, இதையடுத்து பிசிசிஐ இம்முறை உலகக்கோப்பை போட்டிகள் நடத்தத்திட்டமிட்டுள்ள 12 மைதானங்களுக்கும் தலா 50 கோடி ரூபாய் மேம்பாட்டு செலவிற்காக ஒதுக்கியது. இதற்கான பணிகள் 12 மைதானங்களிலும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு உள்ளது. இதனால் ஐபிஎல் தொடருக்குப் பின்னர் தொடங்கி ஆசிய கோப்பை முடியும் வரை அதாவது உலககோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் தொடரும் வரை இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட்டுகள் நடத்துவதை பிசிசிஐ தவிர்த்தது. மேலும், உள்ளூர் போட்டிகளை மற்ற மைதானங்களில் நடத்தவும் பரிந்துரைத்தது. உலகக் கோப்பை தொடருக்கு இம்முறை மொத்தம் 10 நாடுகள் களமிறங்குகின்றன. 


ஐசிசி தரப்பில் உலககோப்பை தொடரை கிரிக்கெட் இன்னும் பிரபலமாகாத மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களையும் இந்த தொடரில் ரசிகர்களாக இணைக்க வேண்டும் என்ற நோக்குடனும் மேலும், அந்த நாடுகளையும் கிரிக்கெட் விளையாடத் தூண்டவேண்டும் என்ற எண்ணத்துடன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


இந்திய அணி இம்முறை கோப்பையை வென்று மூன்றாவது முறையாக உலகக்கோப்பையில் தனது பெயரை பதிவு செய்யவேண்டும் என இந்திய கிரிக்கெட அணியின் முன்னாள் வீரர்கள் தொடங்கி ரசிகர்கள் வரை அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு உள்ளனர். 




இந்நிலையில் அக்டோபர் 4ஆம் தேதி உலகக்கோப்பை தொடக்க விழா மிகவும் பிரமாண்டமாக நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. உலகின் மிகவும் பெரிய மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த மைதனத்தில் தான் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டி துவங்கி இறுதிப் போட்டி வரை மொத்தம் 5 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மைதானம் கடந்த 2016ஆம் ஆண்டு முதல்  2020ஆம் ஆண்டு வரை புதுப்பிக்கப்பட்டது, அதன் பிறகு இந்த மைதானத்தின் இருக்கைகள் 54,000 இலிருந்து 132,000 ஆக அதிகரிக்கப்பட்டது. 


அக்டோபர் 4 ஆம் தேதி தொடக்க விழா.


அக்டோபர் 5-ம் தேதி இங்கிலாந்து vs நியூசிலாந்து.


- அக்டோபர் 14 அன்று இந்தியா vs பாகிஸ்தான்.


நவம்பர் 4-ம் தேதி இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா.


- தென்னாப்பிரிக்கா vs ஆப்கானிஸ்தான் நவம்பர் 10 அன்று.


- இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.