உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கி இந்தியா முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மைதானங்களில் நடைபெற்று வருகின்றது. இதில் மொத்தம் 10 அணிகள் களமிறங்கியுள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களினைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்நிலையில் 10 அணிகள் வெற்றிக்கான வேட்டையில் தீவிரமாக விளையாடி வருகின்றன. 


இந்தியா முதலிடம்:


இதில் இந்திய அணி தற்போது வரை அதாவது அக்டோபர் 14ஆம் தேதி வரை 3 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் இந்திய அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகள் மற்றும் 1.821 நெட் ரன்ரேட்டில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி தான் எதிர்கொண்ட முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட் வித்தியாசத்திலும், ஆஃப்கானிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்திலும் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தினை எட்டியுள்ளது. 


புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் மூன்று வெற்றிகளுடன் நியூசிலாந்து அணி உள்ளது. மூன்றாவது இடத்தில் தென் ஆப்ரிக்கா அணியும் நான்காவது இடத்தில் பாகிஸ்தான் அணியும் உள்ளன.