2023 உலகக் கோப்பையில் இன்று வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்றைய போட்டியில் அனைவரின் பார்வையும் ஷகிப் அல் ஹசன் மீதுதான் இருக்கும். ஏனென்றால், இந்தப் போட்டியில் 41 ரன்கள் எடுத்தால் இந்த வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன், உலகக் கோப்பை வரலாற்றில் சிறந்த ஆல்ரவுண்டர் பட்டியலில் முதலிடத்திற்கு செல்வார்.


தற்போது, ​​உலகக் கோப்பையில் 1000+ ரன்கள் மற்றும் 10+ விக்கெட்டுகள் எடுத்த 8 ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ஷகிப் அல் ஹசன் 4வது இடத்தில் உள்ளார். இருப்பினும், இந்த 8 ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ஷகிப் அல் ஹசன்தான் அதிக விக்கெட்கள் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 5வது உலகக் கோப்பையில் இன்று களமிறங்கும் அவர், கடந்த நான்கு உலகக் கோப்பையில் இதுவரை 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ரன்களின் அடிப்படையில், ஷகிப் பேட்டிங் மூலம் 1146 ரன்கள் எடுத்துள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் கிறிஸ் கெயிலை விட அவர் 40 ரன்கள் பின்தங்கியுள்ளார். எனவே இன்றைய போட்டியில் ஷகிப் அல் ஹசன் 41 ரன்கள் எடுத்தால் 1000+ ரன்கள் மற்றும் 10+ விக்கெட்டுகளை எடுத்த ஆல்-ரவுண்டர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறுவார். 


ஷகிப்பின் உலகக் கோப்பை வாழ்க்கை:


ஷகிப் அல் ஹசன் கடந்த 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அறிமுகமானார். இந்த முறை அவர் தனது 5வது உலகக் கோப்பையை விளையாடுகிறார். ஷகிப் இதுவரை நான்கு உலகக் கோப்பைகளில் மொத்தம் 29 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தப் போட்டிகளில், ஷகிப் 45.84 பேட்டிங் சராசரியில் 2 சதங்கள் உள்பட மொத்தமாக 1146 ரன்கள் எடுத்துள்ளார்.


ஷகிப் அல் ஹசன் கடந்த 2019 உலகக் கோப்பையில் 600 ரன்களுக்கு மேல் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், ஷகிப் பந்துவீச்சிலும் மிகவும் திறம்பட செயல்பட்டு, இதுவரை பங்கேற்ற உலகக் கோப்பையில் 35.94 பந்துவீச்சு சராசரியில் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


உலகக் கோப்பையில் 1000+ ரன்கள் மற்றும் 10+ விக்கெட்டுகளை எடுத்த ஆல்-ரவுண்டர்கள்



  1.  கிறிஸ் கெய்ல்: 35 போட்டிகளில் 1186 ரன்கள் மற்றும் 16 விக்கெட்டுகள்

  2. சனத் ஜெயசூர்யா: 1165 ரன்கள் மற்றும் 38 போட்டிகளில் 27 விக்கெட்டுகள்

  3. ஜாக் காலிஸ்: 1148 ரன்கள் மற்றும் 36 போட்டிகளில் 21 விக்கெட்டுக்கள்

  4. ஷகிப் அல் ஹசன்: 29 போட்டிகளில் 1146 ஓட்டங்கள் மற்றும் 34 விக்கெட்டுக்கள்

  5. திலகரத்ன டில்ஷான்: 1112 ஓட்டங்கள் மற்றும் 27 போட்டிகளில் 18 விக்கெட்டுக்கள்

  6. அரவிந்த டி சில்வா: 1064 ஓட்டங்கள் மற்றும் 16 விக்கெட்கள்

  7. விவியன் ரிச்சர்ட்ஸ்: 23 போட்டிகளில் 1013 ரன்கள் மற்றும் 10 விக்கெட்டுகள்

  8. சவுரவ் கங்குலி: 21 போட்டிகளில் 1006 ரன்கள் மற்றும் 10 விக்கெட்டுகள்


உலகக் கோப்பைக்கான வங்கதேச அணி 


ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), தஞ்சீத் ஹசன், லிட்டன் தாஸ், நஸ்முல் ஹுசைன் ஷாண்டோ, மஹ்முதுல்லா, தௌஹீத் ஹ்ரிடோய், மெஹ்தி ஹசன் மிராஜ், மெஹ்தி ஹசன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோஸ்ஃபுல் மஹ்மத், நஸும் தன்சீம் ஹசன் சாகிப். 


உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி 


ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா சத்ரான், முகமது நபி, ரஷித் கான், நவீன் உல் ஹக், முஜீப் உர் ரஹ்மான், அஸ்மத்துல்லா உமர்சாய், ஃபசல்ஹாக் அஹ்மத், ரெஹ்மத் ஃபரூக் இக்ராம் அலிகில்.