டி20 உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. நவம்பர் மாதம் 14ஆம் தேதி டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்த டி20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. 


இது தொடர்பாக நியூசிலாந்து அணி சார்பில் தற்போது ஒரு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நியூசிலாந்து-இந்தியா அணிகளுக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடர்ந்து வரும் நவம்பர் மாதம் 18ஆம் தேதி தொடங்கி நவம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 


 






முதலில் வெல்லிங்டன், தருங்கா மற்றும் நேப்பியர் உள்ளிட்ட 3 இடங்களில் டி20 போட்டிகள் நடைபெற உள்ளது. அதன்பின்னர் நவம்பர் 25 ஆம் தேதி முதல் அக்லாந்து, ஹமில்டன் மற்றும் கிறிஸ்ட்சர்ச் உள்ளிட்ட இடங்களில் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. 


2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்பு நியூசிலாந்து அணி இந்தியா சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றது. அதைபோல் இந்தாண்டு டி20 உலகக் கோப்பை முடிந்த பின்பு இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. கடந்த முறை இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்திருந்தது. ஆகவே இம்முறை இந்திய அணி டி20 உலகக் கோப்பை சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் நியூசிலாந்து தொடரும் இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண