கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்கும் வீடியோ: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்தார்.அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கேன் வில்லியம்சன் அவுட்:
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நியூசிலாந்தின் மூத்த பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்ததால் அனைவரும் அதிர்ச்சியடைந்து போனார்கள் கேன் வில்லியம்சன் எதிரணி வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ பாட்ஸால் துரதிர்ஷ்டவசமாக கிளீன் பவுல்டு ஆனார்.
இதையும் படிங்க: லாரா, ரோகித் எல்லாம் ஓரம்போ! சிக்ஸர் அடிப்பதில் சிங்க நடைபோடும் பிரபல பவுலர் - யாருங்க அவரு?
59வது ஓவரில் இந்த விநோத சம்பவம் நடந்தது. அந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ பாட்ஸ் வீசினார். கேன் வில்லியம்சன் பேட்டிங் செய்ய கிரீஸில் நின்றார் . அப்போது பாட்ஸ் அந்த ஓவரின் கடைசி பந்தை வீசினார். அப்போது வில்லியம்சன் டிப்பென்சிவ் ஷாட்டை விளையாட முயன்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பந்து பேட்டில் பட்டு ஸ்டம் அருகே சென்றது. கேன் வில்லியம்சன் தனது காலால் பந்தை தடுக்க முயன்றார், ஆனால் பந்து வேகத்தில் விக்கெட்டைத் தாக்கியது.
கேன் வில்லியம்சன் கிளீன் பவுல்டு ஆன பிறகு, களத்தில் கோபத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்தி பெவிலியன் திரும்பினார். இந்த போட்டியில் கேன் வில்லியம்சன் சிறப்பாக பேட்டிங் செய்து 44 ரன்கள் எடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நியூசிலாந்து 319/9:
நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டாம் லாதம் மற்றும் வில் யங் ஜோடி 105 ரன்களை சேர்த்து அணிக்கு நல்ல தொடக்கத்தை பெற்றுத் தந்தது. வில்லியம்சனும் சிறப்பாக பேட்டிங் செய்து இன்னிங்ஸை முன்னோக்கி கொண்டு சென்றார். ஆனால் கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி அடுத்தது விக்கெட்டுகளை இழந்தது. இதனால் நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்தது.