உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்றது. உலகக்கோப்பை கிரிக்கெட்டைப் போல இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர்.


மகுடம் சூடிய இந்தியா:


இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் யுவராஜ்சிங் தலைமையில் களமிறங்கினர். இந்த தொடர் தொடங்கியது முதலே இந்தியா – பாகிஸ்தான் அணி சிறப்பாக ஆடினர். இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி யுவராஜ்சிங் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


2011ம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றிக்கு காரணமான யுவராஜ்சிங், இந்த உலக சாம்பியன்ஸ் தொடர் முதலே பேட்டிங், பவுலிங்கில் அசத்திய யுவராஜ்சிங் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக அமைந்தார். கேப்டனாக யுவராஜ் சிங் பெற்ற மிகப்பெரிய கோப்பை இதுவாகும்.


இதைவிட சிறந்த உணர்வு கிடையாது:


இந்த வெற்றி குறித்து யுவராஜ்சிங் கூறியதாவது, இந்தியாவிற்காக விளையாடுவதிலும், இந்தியாவிற்காக வெற்றி பெறுவதை காட்டிலும் எந்த சிறந்த உணர்வும் இருக்க முடியாது. இதுதான் எங்கள் இலக்கு. நீங்கள் அனைவரும் பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அதனால் களத்தில் ஃபீல்டிங் செய்வது கடினம் என்று கூறினீர்கள். ஆனால், நான் சொல்கிறேன் இதை விட சிறந்த உணர்வு எதுவும் கிடையாது.


இந்த தொடரில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் உண்மையில் சிறந்த அணிகள் ஆகும். நாங்கள் அவர்களை வீழ்த்த சிறந்த கிரிக்கெட்டை ஆட வேண்டும். அதை ஆடிக்காட்டினோம். குறிப்பாக, பாகிஸ்தான் பந்துவீச்சிற்கு எதிராக சிறப்பாக திட்டமிட்டு அவர்களை வீழ்த்தினோம்.


பர்மிங்காமில் ஆடியது சிறந்த அனுபவமாக இருந்தது. இந்த கூட்டம் தனிச்சிறப்பாக இருந்தது. இது சிறந்த இடம் என்று நினைக்கிறேன். இதைவிட சிறந்த இந்தியா – பாகிஸ்தான் இறுதி ஆட்டத்தை அவர்களால் தர முடியாது என்று நினைக்கிறேன். அனைவரும் இந்த ஆட்டத்தை ரசித்தார்கள். தற்போது டிராபியுடன் நாங்கள் செல்லப்போகிறோம்.”


இவ்வாறு அவர் கூறினார்.


இந்திய அணிக்காக இந்த தொடரில் யுவராஜ்சிங், அம்பத்தி ராயுடு, யூசுப் பதான், இர்ஃபான் பதான், ஹர்பஜன்சிங், வினய்குமார் உள்ளிட்ட பிரபல வீரர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: முடிவுக்கு வரும் ஜாம்பவான்களின் சகாப்தம்! அடுத்த தலைமுறைக்கு வழிவிடும் சாதனை நாயகர்கள்!


மேலும் படிக்க: Watch Video: ஒரே பந்தில் 13 ரன்கள்! ஜெய்ஸ்வால் படைத்த புதிய உலக சாதனை - நீங்களே பாருங்க