வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான நிக்கோலஸ் பூரன் துபாய் டி10 லீக்கில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடிய 33 பந்துகளில் 72 ரன்கள் அசத்தினார். மேலும் இந்த போட்டியில் அவர் ரிஷப் பண்ட் பாணியில் அவர் அடித்த சிக்ஸ் தற்போது வைரலாக வருகிறது.
துபாய் டி10 லீக்:
டி20 கிரிக்கெட்டுக்கு பிறகு அடுத்ததாக பிரபலமாகி வருவது டி10 தொடர். அதன் ஒரு பகுதியாக துபாயில் டி10 லீக் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் பத்து அணிகள் இந்த தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இதில் டெக்கான் கிளேயடியேட்டர்ஸ் அணிக்காக நிக்கோலஸ் பூரன் விளையாடிவருகிறார்
மேலும் படிக்க: WTC Points Table: அங்குசாமி நீ நல்லா இருப்ப! வெளியேறிய நியூசிலாந்து! இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்
பண்ட் ஸ்டைலில் சிக்ஸ்:
இந்த குவாலிப்பையர் 1-ல் டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணி மற்றும் மோர்ஸ்வில் சாம்ப் ஆர்மி ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியின் 9-வது ஓவரில் முகமது ஜாஹித் வீசினார். அவரது இடுப்பு உயரத்திற்கு மேல் வந்த முழு டாஸ் பந்தை ஃபைன் லெக்கில் சிக்ஸருக்கு ஸ்கூப் செய்தார். அவர் 33 பந்துகளில் 72 ரன்கள் அசத்தினார்.
மேலும் அவரின் இந்த சிக்சர் ரிஷப் பண்ட்டின் பாணியில் இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ரிஷப்
டெக்கான் அணி வெற்றி:
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெக்கான் அணி 147 ரன்களை எடுத்தது, அடுத்து களமிறங்கி இலக்கை துரத்திய மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மியால் 10 ஓவர்கள் முடிவில் 102 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த வெற்றியின் மூலம் டெக்கான் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது. இஃ மோரிஸ்வில்லி சாம்ப் ஆர்மி மற்றும் டெல்லி புல்ஸ் இடையே குவாலிஃபையர் 2 இல் போட்டி நடைப்பெறவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் டெக்கான் அணியுடன் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.