உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (அக்டோபர் 18) நடைபெற்ற 16 வது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.


ஆப்கான் தோல்வி:


இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டெவோன் கான்வே 20 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.


மறுபுறம் வில் யங் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். 64 பந்துகளில் 4 பவுண்டரிகள்  3 சிக்ஸர்கள் என மொத்தம் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், களமிறங்கிட அந்த அணியின் கேப்டன் டாம் லாதம் 74 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 68 ரன்களை குவித்தார். அதேபோல் க்ளென் பிலிப்ஸ் 80 பந்துகளில் 4 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் என மொத்தம் 71 ரன்கள் விளாசினார். 


பின்னர், 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆப்கானிஸ்தான் அணி. ஆனால் அந்த அணிக்கு ஏமாற்றாமே மிஞ்சியது. 34.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாப தோல்வியை பெற்றது 149 ரன்கள் வித்தியாசத்தில் அபரா வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி.


இந்த தொடரில் இதுவரை நடந்த 16 லீக் போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்ற பெற்ற அணி என்ற பெருமையை பெற்றது நியூசிலாந்து அணி.


புள்ளிப்பட்டியலில் முதலிடம்:



இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி முதல் இடத்திற்கு முன்னேறியது.


அதன்படி, இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, +1.923 என்ற ரன் ரேட்டுடன் மொத்தம் 8 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளது.


இதனிடையே இன்றைய தோல்வியின் மூலம் ஒன்பதாவது இடத்திற்கு சென்றது ஆப்கானிஸ்தான் அணி. 


மேலும் படிக்க: Cricket World Cup 2023: நான் ரெடிதான் வரவா... இந்தியாவை தோற்கடித்தால் டேட்டிங் வருவேன்.. பாகிஸ்தான் நடிகை அதிரடி!


 


மேலும் படிக்க: Watch Video: அந்தரத்தில் பறந்து ஒற்றைக் கையில் கேட்ச் பிடித்த சான்ட்னர் - நீங்களே பாருங்க!