உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (அக்டோபர் 18) நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடியது.


 






முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில், முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஒவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது. பின்னர், 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆப்கானிஸ்தான் அணி.


அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.  இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்களில் 139 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்றுள்ளது. 


தாவி பிடித்த மிட்செல் சான்ட்னர்:


நியூசிலாந்துஅணி வீரர் லாக்கி பெர்குசன் 14 வது ஓவரை வீசினார். அப்போது எதிர்முனையில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிடி பந்தை ஓங்கி அடித்தார். அப்போது அந்த பந்தை டைவ் அடித்து கேட்ச் பிடித்தார் மிட்செல் சான்ட்னர்.


தற்போது இவர் பிடித்த இந்த கேட்ச் தொடர்பான வீடியோக்கள் தான் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. முன்னதாக, இலங்கைக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் டைவ் அடித்து பிடித்த கேட்ச் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.  அதன்படி, கடந்த 5 ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூசிலாந்து.


அதேபோல், கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி நெதர்லாந்து அணியை எதிர் கொண்ட நியூசிலாந்து 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச அணியை கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி எதிர்கொண்ட நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.


 


மேலும் படிக்க: Cricket World Cup 2023: நான் ரெடிதான் வரவா... இந்தியாவை தோற்கடித்தால் டேட்டிங் வருவேன்.. பாகிஸ்தான் நடிகை அதிரடி!


 


மேலும் படிக்க: NZ vs AFG Match Highlights: மொத்தமாக சரண்டர் ஆன ஆஃப்கானிஸ்தான்; 149 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து இமாலய வெற்றி