இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் தொடர்:
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி விளையாட்டு மைதானத்தில் 16-ம் தேதி தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து ஆனது. இரண்டாம் நாள் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்சில் இந்திய அணியின் விராட் கோலி, சர்பராஸ் கான், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய 5 வீரர்களும் டக் அவுட்டாகி வெளியேறினர். 23 ஓவர்கள் முடிவில் 34 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 20 ரன்களை பதிவு செய்தார். பின்னர் வந்த குல்தீப் யாதவ் 2 ரன்கள், ஜஸ்ப்ரித் பும்ரா 1 ரன்கள் எடுக்க முகமது சிராஜ் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் நின்றார். இவ்வாறாக இந்திய அணி 31.2 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்களை மட்டுமே எடுத்தது.
அதன் பிறகு விளையாடிய நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம் மற்றும் டெவோன் கான்வே களம் இறங்கினார்கள். கேப்டன் டாம் லாதம் 15 ரன்களில் பெவிலியன் திரும்பினார். கான்வே நிதானமாக விளையாடினார். அடுத்து வந்த வில் யங் 33 ரன்ன்னில் ஆட்டமிழந்தார். கான்வே உடன் கூட்டணி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா சிறப்பாக விளையாடினார். 124 பந்துகளில் சதம் விளாசினார். அதன்பிறகு விக்கெட் இழந்தாலும் நியூ. அணியின் ரச்சின் ரவீந்திரா சிறப்பான ஆட்டதை வெளிப்படுத்தினார். டிம் சவுதி 66 ரன்களை குவித்தார். ரச்சின் ரவீந்திரா 134 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க 402 ரன்களில் ஆல் அவுட் ஆனது நியூசிலாந்து அணி.
இந்திய அணி நியூசிலாந்துக்கு 107 ரன் இலக்காக நிர்ணயித்தது. நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ளில் நிதானமாக களத்தில் நின்று இந்த இலக்கை நிர்ணயித்தது. பும்ரா தனது முதல் ஓவரிலேயே நியூசிலாந்து கேப்டன் டாம் லாதமை டக் அவுட் உடன் வெளியேற்றினார். கான்வே விக்கெட்டையும் பும்ரா எடுத்தார். அதற்கு அடுத்து வந்த வில் யங், ரச்சின் ரவீந்திரா இருவரும் இணைந்து விளையாடி இலக்கை எட்டினர்.
27.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்து இருந்தது நியூசிலாந்து அணி. அந்த அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதில், வில் யங் 48 ரன்களும், ரச்சின் ரவீந்திரன் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மூன்று போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் 1-0 என நியூசிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் அக்.-27-ஆம் தேதி புனேவில் தொடங்கவுள்ளது.