நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை நியூசிலாந்து அணியின் கேப்ட கேரி உறுதி செய்தார்.
முன்னதாக லேசான கொரோனா அறிகுறிகள் அவருக்கு தென்பட்ட நிலையில், ரேப்பிட் ஆண்டிஜன் டெஸ்ட் (RAT) அவருக்கு மேற்கொள்ளப்பட்டது.
இதில் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அடுத்த ஐந்து நாள்களுக்கு வில்லியம்சன் தனிமைப்படுத்துப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நியூசிலாந்து அணியின் கேப்டன் கூலாக விளங்கும் கேன் வில்லியம்சன், இன்று இங்கிலாந்தின் நொட்டிங்காம் நகரில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.
மேலும், கேன் வில்லியம்சனுக்கு பதிலாக டோம் லாதம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்படுவார் எனவும், வில்லியம்சனுக்கு பதிலாக ஹேமிஷ் ரூதர்ஃபோர்டு இன்றைய போட்டியில் களமிறக்கப்படுவார் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது பங்கேற்று வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டவை இப்போட்டிகள் என்பதால் இவை பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இங்கிலாந்து-நியூசிலாந்து இடையே முன்னதாக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று முன்னணியில் உள்ளது.