இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி எப்போது நடந்தாலும் சூடுபிடிக்கும். அதுவும் உலகக் கோப்பைகளில் என்றால் சொல்லவா வேண்டும். வருகின்ற ஜூன் மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன. 


இந்தநிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெறும் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் ஸ்டேடியத்தை சுற்றி கட்டுமானப் பணிகள் நடைபெற்று நிலையில், அதற்கான வீடியோவை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில், ஸ்டேடியம் முழுவதும் முற்றிலும் புதிதாக புனரமைக்கப்பட்டு வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 


கவுண்டி சர்வதேச கிரிக்கெய் ஸ்டேடியத்தில் 34 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்கும் வகையில், 8 போட்டிகள் நடைபெறுகிறது. இதில், ஜூன் 9 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான முக்கிய போட்டி உட்பட எட்டு போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெறுகிறது. 






ஐசிசி நிகழ்வுகளின் தலைவட் கிறிஸ் டெட்லி, ஸ்டேடியத்தின் கட்டுமான பணியின் முன்னேற்றம் குறித்து பேசினார். அதில், “ நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த மாதம் முதல் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை கண்டு மகிழ்ச்சியாக உள்ளது.  ஜனவரியில் அவுட்ஃபீல்டுக்கான பணிகள் தொடங்கி, கடந்த சில வாரங்களாக ஈஸ்ட் ஸ்டான்ட் அமைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது” என்றார். 


டிக்கெட் விற்பனை எப்போது..? 


அயர்லாந்து மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் போட்டிகள் உட்பட நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஆறு டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.  அமெரிக்காவில் குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் விளையாடும் இந்தியா, ஜூன் 5 ஆம் தேதி அயர்லாந்திற்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடுகிறது.


நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஜூன் 5-ம் தேதி இந்தியா vs அயர்லாந்து மற்றும் ஜூன் 12-ம் தேதி இந்தியா vs அயர்லாந்து உட்பட ஆறு போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு வருகிறது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.


மேலும், ஜூன் 1 ஆம் தேதி அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உலகக் கோப்பை தொடக்கப் போட்டி உட்பட டெக்சாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நான்கு போட்டிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.  


டி20 உலகக் கோப்பை போட்டி ஜூன் 1-ம் தேதி அமெரிக்கா மற்றும் கனடா இடையேயான போட்டியுடன் தொடங்குகிறது. இதன் இறுதிப்போட்டியானது வருகின்ற ஜூன் 29-ம் தேதி பார்படாஸில் நடைபெறுகிறது. 


இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை உலகக் கோப்பையில் நேருக்குநேர்: 


டி20 உலகக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் எட்டாவது முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன. இதற்கு முன் இரு அணிகளும் டி20 உலகக் கோப்பையில் ஏழு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்திய அணி 6 முறையும், பாகிஸ்தான் அணி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பைகள் உட்பட, இந்திய அணி ஒரே ஒரு முறை பாகிஸ்தானிடம் தோற்றுள்ளது. இந்த ஆட்டம் 2021 டி20 உலகக் கோப்பையில் விளையாடப்பட்டது, இதில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.