பிரபல கிரிக்கெட் வீரரும், நேபாள முன்னாள் கேப்டனுமான சந்தீப் லாமிச்சானே, மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். காத்மாண்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று (டிசம்பர் 29) நடைபெற்ற விசாரணையில் லாமிச்சானே அவரை குற்றவாளி என அறிவித்தது.
சந்தீப் எவ்வளவு காலம் சிறையில் அடைக்கப்படுவார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றாலும், 2024 ஜனவரி 10 ஆம் தேதி நடைபெறும் அடுத்த விசாரணையில் முடிவு செய்யப்படும். நீதிபதி ஷிஷிர் ராஜ் தாகலின் பெஞ்ச் வெள்ளிக்கிழமை ஒரு வார கால விசாரணையை முடித்தபோது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட போது சிறுமி மைனர் என்று கூறப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இறுதி விசாரணை முடிவடைந்ததையடுத்து நீதிபதி ஷிஷிர் ராஜ் தக்கல் அடங்கிய ஒன்றை பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது.
சந்தீப் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். கடந்த ஜனவரி 12ம் தேதி பதான் உயர்நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி லாமிச்சானே சுந்தராவில் உள்ள மத்திய சிறைக்கு அனுப்பியது. இதையடுத்து, கடந்த ஜனவரி 2023ம் தேதி ஜாமீனில் வெளிவந்தார். அப்போது, நீதிபதி துருவ்ராஜ் நந்தா மற்றும் நீதிபதி ரமேஷ் தஹல் ஆகியோர் அடங்கிய பதான் உயர்நீதிமன்றத்தின் கூட்டு பெஞ்ச் வருகின்ற ஜனவரி 12ம் தேதி சில நிபந்தனைகளுடன் 20 லட்சம் நேபாள ரூயாய் பத்திரத்தில் சந்தீப்பை விடுவிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக நேபாள கிரிக்கெட் வீரர் லாமிச்சானே மீது காத்மாண்டு மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் ஆகஸ்ட் 21 அன்று வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி லாமிச்சானே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சந்தீப் லாமிச்சானே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டபோது, கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடுவதற்காக டிரினிடாட் மற்றும் டொபாகோ சென்றிந்தார். பின்னர் அவர் அக்டோபர் 6ம் தேதி திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பின்னர், சந்தீப்பின் வங்கிக் கணக்கு சீல் வைக்கப்பட்டு, அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிரிக்கெட் வீரராக சந்தீப் லாமிச்சானே எப்படி..?
சந்தீப் லாமிச்சானே நேபாளத்திற்காக 51 ஒருநாள் மற்றும் 51 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர் ஒருநாள் போட்டியில் 112 விக்கெட்டுகளையும் டி20 இல் 98 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இது தவிர, சந்தீப் இந்தியன் பிரீமியர் லீக்கிலும் விளையாடியுள்ளார், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் விளையாடிய ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தார். அதில் அவர் 9 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெற்று 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.