டெஸ்ட் தரவரிசைப்பட்டியல்:


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. அதன்படி கடந்த ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது. இதில் 2-வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.


 


6 வது இடத்திற்கு முன்னேறிய விராட் கோலி:


அதன்படி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்பட்டியலில் நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன் 864 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். அதேபோல், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி வீரர் உஸ்மான் கவாஜா 9-வது இடத்தில் இருந்து 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 10-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி வீரர் பாபர் அசாம் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.  முதல் 5 இடத்தில் எந்த இந்திய அணி வீரர்களுடம் இடம் பிடிக்காத நிலையில் இந்திய அணி வீரர் விராட் கோலி 767 புள்ளுகளுடன் 6-வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார். அதேநேரம் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஒல்லி போப் 20 இடங்கள் முன்னேறி 684 புள்ளுகளுடன் 15-வது இடத்தில் இருக்கிறார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 11-வது இடத்தில் இருந்து 12 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.


முதல் இடத்தை அலங்கரிக்கும் அஸ்வின்:


அதேபோல் பந்துவீச்சாளர்களின் டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 853 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். தென்னாப்பிரிக்க வீரர் ககிஷோ ரபாடா 851 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஜஸ்பிரித் பும்ரா 825 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளர். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் சிறந்த ஆல்-ரவுண்டர்களை பொறுத்தவரை 425 புள்ளிகளுடன் இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா முதல் இடத்தில் உள்ளார். அதேபோல், 328 புள்ளிகளுடன் ரவிச்சந்திரன் அஸ்வின் 2-வது இடத்தை தக்கவைத்துள்ளார்


 


மேலும் படிக்க: Khelo India Games: கேலோ இந்தியா... இரண்டாவது இடத்தை தட்டித்தூக்கிய தமிழ்நாடு! எத்தனை பதக்கங்கள் தெரியுமா?


 


மேலும் படிக்க: Tamil Thalaivas vs Jaipur Pink Panthers: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்! முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தேர்வு!