கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்:

நாட்டில் உள்ள இளைஞர்களின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்கும் விதமாக, மாநிலங்களுக்கு இடையேயான இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. முதல்முறையாக தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த போட்டியை, கடந்த ஜனவரி 19 ஆம் தேதி பிரதமர் மோடி நேரில் சென்னை வந்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை உள்ளிட்ட நகரங்களில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

இதில், கால்பந்து, கபடி, வாலிபால், ஜூடோ, பளு தூக்குதல், ஸ்குவாஸ், வில்வித்தைகள், குத்துச் சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிள், ஜிம்னாஸ்டிக், நீச்சல், ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், யோகா, மல்யுத்தம் முதலிய விளையாட்டுப் போட்டிகள், பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்டன. தமிழ்நாடு சார்பிலும் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் வீரர் மற்றும் வீராங்கனைகள் களமிறங்கினர். இதில் தமிழ்நாடு 38 தங்கம், 20 வெள்ளி மற்றும் 39 வெண்கலப்பதக்கங்களுடன்  இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முன்னதாக கடந்த முறை எட்டாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு இந்த முறை இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பதக்கப்பட்டியல்:

 

1 மகாராஷ்டிரா 55 48 53 156
2 தமிழ்நாடு 38 20 39 97
3 ஹரியானா 35 22 46 103
4 டெல்லி 13 18 24 55
5 ராஜஸ்தான் 13 17 17 47

இந்நிலையில் கடந்த 13 நாட்களாக நடைபெற்ற கேலே இந்தியா விளையாட்டு போட்டிகள், இன்றுடன் நிறைவு பெற்றது.  கடைசி நாளான இன்று கால்பந்து, டேபிள் டென்னிஸ், டென்னிஸ் மற்றும் நீச்சல் ஆகிய விளையாட்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர். அவர்கள், வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்க உள்ளனர்.

மேலும் படிக்க: Musheer Khan: 20 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய சாதனை படைத்த முஷீர் கான்.. ஷிகர் தவான் பட்டியலில் இணைந்து அசத்தல்!

மேலும் படிக்க: IND vs ENG 2nd Test: விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் சாதனை என்ன? இந்த மண்ணில் கலக்கிய அஸ்வின், கோலி..!