குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்துள்ளது.
தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்ற மும்பை அணி இன்று குஜராத் அணியை எதிர் கொண்டது. டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச முடிவு செய்தது.
அதன்படி, களமிறங்கிய மும்பை அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்து இருந்தது. முதல் ஓவரின் நான்காவது பந்தில் மும்பை அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேத்யூஸ் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டினை பறிகொடுத்தார். குஜராத் அணி சிறப்பாக பந்து வீசியாதால், மும்பை அணி ரன் எடுக்க திண்றியது. பவர்ப்ளேவில் மும்பை அணியால் 50 ரன்களைக் கூட எடுக்க முடியவில்லை. மும்பை அணி 6 ஓவர்கள் முடிவில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தொடர்ந்து நிதானமாக ஆடிவந்த மும்பை அணி, 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்து இருந்தது. அதன் பின்னர் அதிரடி காட்டிய யாஸ்திகா மற்றும் ஷிவர் பர்ண்ட் பந்துகளை தொடர்ந்து பவுண்டரிக்கு விரட்ட ஆரம்பித்தனர். ஆனால் இந்த அதிரடி தொடர்ந்து நீடிக்கவில்லை. சிறப்பாக பந்து வீசிய குஜராத் அணி மும்பை அணியை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வந்தது. இறுதியில் மும்பை அணியை அந்த அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சிறப்பாக விளையாடி மும்பை அணியை 150 ரன்களைக் கடக்க வைத்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. 20வது ஓவரின் நான்காவது பந்தில் ஹர்மர்ப்ரீத் கவுர் 51 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்னர் அடுத்த பந்திலும் குஜராத் அணி ஒரு விக்கெட்டை பறிகொடுத்தது.