MS Dhoni Birthday:  கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு, முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


தோனி பிறந்தநாள்:


இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்ற பெருமை தோனியையே சேரும். அவர் இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வரும் தோனி பற்றிய, பல சுவாரஸ்யமான தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.



  • 2004-ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் எம்எஸ் தோனி சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார்

  • இந்திய கிரிக்கெட் அணியில் இணைவதற்கு முன்பு தோனி கரக்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் செக்கராக பணியாற்றி வந்தார்

  • கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் தோனிக்கு வைத்திருந்த நீண்ட முடி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது

  • டிசம்பர் 2005ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக இலங்கைக்கு எதிராக களமிறங்கினார்

  • ஒரு வருட காத்திருப்புக்கு பிறகு தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக தனது முதல் டி20 போட்டியில் விளையாடினார்

  • தோனி தனது முதல் டெஸ்ட் அரைசதத்தை டிசம்பர் 2005ம் ஆண்டு  இலங்கைக்கு எதிராக பதிவு செய்தார்

  • ஏப்ரல் 2008ல் முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணிக்கு தலைமை தாங்கினார்

  • அந்த ஆண்டு நவம்பரில் தோனி முதல் முறையாக டெஸ்ட் அணியின் தலைமைப் பொறுப்புகளை கையாண்டார்

  • 2009 டிசம்பரில் தோனியின் தலைமையின் கீழ் இந்தியா முதல் முறையாக டெஸ்ட் அணியில் நம்பர் ஒன் இடம் பிடித்தது

  • பிப்ரவரி 2013 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோனி தனது முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை விளாசினர்

  • ஒருநாள் போட்டிகளில், இந்தியாவை அதிக போட்டிகளுக்கு (200) வழிநடத்தியவர்

  • இந்திய அணிக்கு அதிக டி20 போட்டிகளுக்கு (72) கேப்டனாகவும் தோனி இருந்துள்ளார்

  • 2014 டிசம்பரில் இந்தியாவின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது தோனி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்

  • அதே தொடரிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்

  • 2017 ஜனவரியில் லிமிடெட்  ஓவர் கிரிக்கெட்டில் கேப்டன் பதவியை தோனி ராஜினாமா செய்தார்

  • ஐபிஎல்லில், தோனி முதலில் ஏப்ரல் 2008 இல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தற்போது பஞ்சாப் கிங்ஸ்) அணிக்கு எதிராக விளையாடினார்

  • ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் (264) பங்கேற்றவர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்

  • 250 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமையையும் தோனி வசம் உண்டு

  • ஒரு அணியை அதிக ஐபிஎல் போட்டிகளில் (226) வழிநடத்திய பெருமையையும் கொண்டுள்ளார்

  • ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்றதன் மூலம், தோனி ரோகித் சர்மாவுடன் இணைந்து போட்டியில் மிகவும் வெற்றிகரமான கேப்டன் ஆக உள்ளார்

  •  2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இரண்டு சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளை, தோனி தலைமையில் சென்னை வென்றது

  • 2007ஆம் ஆண்டு இந்திய அணி முதன்முறையாக டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையில் வென்றது

  • 2011ஆம் ஆண்டு தோனியின் தலைமையில் இந்திய அணி இரண்டாவது ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது

  • 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை தோனி தலைமையில் இந்தியா வென்றது

  • மூன்று ஐசிசி போட்டிகளையும் வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்றார்

  • சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளில் (829) பங்காற்றிய மூன்றவது வீரர்

  • ஒட்டுமொத்தமாக தோனி கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் அதிக எண்ணிக்கையிலான ஸ்டம்பிங் (195) செய்துள்ளார்

  • 2007 இல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை (தற்போது மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது என்று அழைக்கப்படுகிறது) பெற்றார்

  • 2009 ஆம் ஆண்டு தோனிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது

  • 2018 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது

  • தோனி 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சாக்ஷி சிங்கை மணந்தார்

  • தோனியும் சாக்ஷியும் பிப்ரவரி 6, 2015 அன்று ஜீவா என்ற பெண் குழந்தையை பெற்றனர்

  • இந்திய பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் என்ற கௌரவ பதவியை டோனி பெற்றுள்ளார்

  • தோனி ஒரு தகுதி வாய்ந்த பராட்ரூப்பர் ஆவார்

  • 2019 ஆம் ஆண்டில் தோனி பாராசூட் ரெஜிமென்ட்டுடன் இரண்டு வார பயிற்சி மேற்கொண்டார்

  • தோனி பைக்குகள் மீது ஆர்வம் கொண்டவர், மேலும் ஏராளமான மாடல் பைக்குகளை சேகரித்துள்ளார்

  • புகழ்பெற்ற இந்திய கேப்டன் சமீபத்தில் ஜாவா 42 பாபர் வாங்கினார்

  • 2023 ஆம் ஆண்டில் தோனி ஒரு மெர்சிடிஸ்-ஏஎம்ஜி 632 எஸ்யூவியுடன் தனது கேரேஜை விரிவுபடுத்தினார்

  • தோனிக்கு கிஷோர் குமாரின் பாடல்கள் மற்றும் பழைய கிளாசிக்கல் இசையைக் கேட்பது மிகவும் பிடிக்கும்

  • தோனிக்கு கிரிக்கெட் தவிர WWE மற்றும் கால்பந்தையும் போன்ற விளையாட்டுகளும் பிடிக்கும்

  • தோனி ஆகஸ்ட் 15, 2020 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

  • சர்வதேச கிரிக்கெட்டில், தோனி கடைசியாக 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடினார்

  • தோனியின் ஜெர்சி எண் 7க்கு பிசிசிஐ ஓய்வு அளித்துள்ளது