MS Dhoni Birthday: கிரிக்கெட் வீரர் தோனியின் தரமான 10 இன்னிங்ஸ்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
இந்திய அணிக்கான தோனியின் சிறந்த 5 இன்னிங்ஸ்கள்:
- இலங்கைக்கு எதிராக 183 நாட் அவுட், 2005:
2005 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், தோனி 145 பந்துகளில் 183 ரன்களை விளாசினார். ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் இதுவே அவரது அதிகபட்ச ஸ்கோராகும். 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியபோட்டியில், 15 பவுண்டரிகள், 10 சிக்சர்கள் விளாசினார். 23 பந்துகளை மிச்சப்படுத்தி இந்திய அண்யை தோனி வெற்றி பெற செய்தார்.
- 224 எதிராக ஆஸ்திரேலியா, 2013:
2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான் டெஸ்ட் போட்டியில், டோனி இரட்டை சதம் விளாச் அசத்தினார். அந்த ஆட்டத்தில் இந்தியா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 148 எதிராக பாகிஸ்தான், 2005:
கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், தோனி மற்றொரு மறக்கமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஓபனராக இறங்கிய தோனி 123 பந்துகளில் 148 ரன்கள் சேர்த்தார். அவரது அதிரடியான இன்னிங்ஸ் 15 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களை உள்ளடக்கியது.
- 148 எதிராக பாகிஸ்தான், 2006:
ஜனவரி 2006 இல் பைசலாபாத் டெஸ்டின் போது பாகிஸ்தானுக்கு எதிராக மற்றொரு குறிப்பிடத்தக்க இன்னிங்ஸை ஆடினார். அந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 603 ரன்கள் எட்டுவதற்கு தோனி எடுத்த 148 ரன்கள் பெரும் பங்களித்தது.
- 56 vs இங்கிலாந்து, 2017
T20Iகளில், 2017 இல் இங்கிலாந்துக்கு எதிராக MS தோனி தனது அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தார். அந்த ஆட்டத்தில், அவர் 36 பந்துகளில் 56 ரன்களை விறுவிறுப்பாக விளாசினார். இந்தியாவை 202 ரன்களுக்கு திடமான மொத்தமாக வழிநடத்தினார். அந்த போட்டியில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை அணிக்கான தோனியின் சிறந்த 5 இன்னிங்ஸ்கள்:
- 2019, RCB-க்கு எதிராக 84 ரன்கள், நாட் அவுட்:
2019ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக தோனி தனது அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோரை (84 நாட் அவுட்) எட்டினார். அந்த போட்டியில் 48 பந்துகளில் 84 ரன்களை விளாசினார். பேட்டிங்கில் தோனியின் அசத்தி இருந்தாலும், அந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
- 2018, RCB-க்கு எதிராக 70 ரன்கள், நாட் அவுட்:
ஐபிஎல் 2018 இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 206 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை, சென்னை அணி சேஸ் செய்தபோது தோனி அபாரமான இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். 34 பந்துகளில் 70 ரன்களை குவித்ததோடு, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து, சென்னை அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார்.
- 2018, பஞ்சாபிற்கு எதிராக 79ரன்கள், நாட் அவுட்:
கடந்த 2018ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், தோனி 44 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். தோனியின் இந்த இன்னிங்ஸ் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்சர்களை உள்ளடக்கியது.
- 2013, ஐதராபாத்திற்கு எதிராக 67 ரன்கள், நாட்-அவுட்:
தோனியின் அதிரடி ஆட்டத்திற்கு மேலும் ஒரு சான்று தான், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 2013ம் ஆண்டு இன்னிங்ஸ். அந்த போட்டியில் தோனி 37 பந்துகளில் 67 ரன்களை குவித்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெறச் செய்தார்.
- 2011, RCB-க்கு எதிராக 70 ரன்கள், நாட் அவுட்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் 2011 போட்டியின் போது, தோனி ஒரு மாஸ் ஆன இன்னிங்ஸை ஆடினார். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி பேட்ஸ்மேன்கள் தடுமாறிய நிலையில், நடுகள வீரராக வந்த தோனி 40 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். இதனால் சென்னை அணி 128 ரன்களை எடுத்தது. இருப்பினும் அந்த போட்டியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.