உலக கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த லெஜண்டாக பார்க்கப்படுபவர் எம்.எஸ். தோனி. இவர் ஒவ்வொரு முறையும் கடந்த ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கியபோதும் ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவை கொடுத்தனர். கேப்டன் கூல், தல என்று ரசிகர்கள் இவருக்கு செல்லப்பெயர் வைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றன. 

தோனியின் புகழ் கிரிக்கெட் வட்டாரத்தில் மட்டுமல்ல. தோனி என்ற பெயரை ஒரு பிராண்டாகவும் மாற்றி பல்வேறு பிராண்டுகளில் பங்குதாரராகவும் இருந்து வருகிறார். இந்தநிலையில், தோனியின் ஆண்டு வருமானம், சொத்து விவரம் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் தோனி இரண்டாவது இடத்தில் உள்ளார். 2023ம் ஆண்டு வெளியான தகவலின்படி, எம்.எஸ். தோனியின் நிகர சொத்து மதிப்பு 127 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய மதிப்பின்படி, ரூ. 1040 கோடியாகும். சச்சின் டெண்டுல்கரின் சொத்து மதிப்பு ரூ. 1340 கோடிகள் என்று கூறப்படுகிறது.

தோனி ஆண்டுக்கு பிராண்ட் ஒப்புதல்கள் மூலம் சுமார் 27 மில்லியன் அமெரிக்க டாலர்களும், சிஎஸ்கே அணியின் ஒப்பந்தத்தின் மூலம் சுமார் 12 கோடியும் சம்பாதிக்கிறார். 

பெயர்  மகேந்திர சிங் தோனி 
நிகர மதிப்பு (2023)  $127 மில்லியன் 
நிகர மதிப்பு (இந்திய ரூபாய்)  ரூ. 1040 கோடி 
தொழில்  இந்திய கிரிக்கெட் வீரர் 
மாத வருமானம்  ரூ. 4 கோடி + 
ஆண்டு வருமானம்  ரூ. 50 கோடி + 
ஐபிஎல் சம்பளம்  ரூ. 12 கோடி 

கார், பைக்குகள் மற்றும் விமானம்:

எம்.எஸ். தோனி கிரிக்கெட் மற்றும் கால்பந்தை கடந்து கார், பைக்கின் காதலராக அறியப்படுகிறார். இவர், தனது சூப்பர் மாடல் பைக் மற்றும் கார்களை அடுக்கி வைப்பதற்காகவே பிரத்யேக வீடு ஒன்றை கட்டியதாக கூறப்படுகிறது. இவரது சூப்பர் பைக்குகளின் சேகரிப்பில் தி ஹார்லி-டேவிட்சன் ஃபேட் பாய், கவாசாகி நிஞ்ஜா எச்2 மற்றும் எக்ஸ்132 ஹெல்கேட் உள்ளிட்ட பல்வேறு பைக்குகள் உள்ளன. இதுபோக கார் சேகரிப்பில், போன்டியாக் ஃபயர்பேர்ட், ஆர்மி-கிரேடு நிசான் 1 டன் மற்றும் ஹம்மர் எச்2 ஆகியவை உள்ளன. 


மேலும், 260 கோடி மதிப்பிலான தனியார் ஜெட் விமானமும் தோனியிடம் இருப்பதாக கூறப்படுகிறது. 

தொழிலதிபர் தோனி: 

எம்.எஸ். தோனி செவன் மற்றும் ஸ்போர்ட்ஸ்ஃபிட் வேர்ல்ட் பிரைவேட் லிமிடெட் என்ற பிராண்டில் குறிப்பிடத்தக்க பங்குதாரராக உள்ளார். மேலும், Rhiti Group, KhataBook மற்றும் 7InkBrews நிறுவனங்களிலும் அவருக்கு பங்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. ராஞ்சியில் உள்ள ஹோட்டல் மஹி ரெசிடென்சியும் இவரது பெயரில் உள்ளது. 

இந்தியாவில் பிரீமியர் லீக்குகளின் கீழ் சென்னையின் எஃப்சி கால்பந்து அணி, ராஞ்சி ரேஸ் ஹாக்கி அணி மற்றும் மஹி ரேசிங் டீம் இந்தியா ஆகியவற்றின் சொந்தக்காரர் தோனி. 

எம்.எஸ். தோனியின் மனைவி சாக்ஷி சிங் தோனி 2019 இல் நிறுவப்பட்ட தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் (DEPL) என்ற பட தயாரிப்பு நிறுவனமும் இயங்குகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் தற்போது "Let's Get Married" என்ற தமிழ் படமும் வெளியாக இருக்கிறது. 

ரியல் எஸ்டேட்: 

எம்.எஸ். தோனிக்கு ராஞ்சியில் உள்ள 7 ஏக்கர் பண்ணை வீடுகள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதுவே வாயை பிளக்க வைக்கும் அளவிற்கு மிகப்பெரியதாக இருக்கும். இது தவிர, மும்பை மற்றும் புனேயில் பிரமிக்க வைக்கும் வீடுகள் உள்ளன. 

தனது வாழ்க்கை வரலாற்று திரைப்படமான MS Dhoni: The Untold Story மூலம் ரூ. 30 கோடிகளை எம்.எஸ். தோனி சம்பாதித்தார் என்றும் கூறப்படுகிறது.