இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்:


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறதுஅதன்படிமுதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணிஇரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறதுஇதனிடையேஇந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று  பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கியது.


வரலாற்றில் இடம்பிடித்த அஸ்வின்:


இதில் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 445 ரன்களை குவித்தது. பின்னர், தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கியது இங்கிலாந்து அணி. அதன்படி, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாக் கிராலி மற்றும் பென் டக்கெட் களம் இறங்கினார்கள். இதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய பந்தில் சாக் கிராவ்லி தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். இதனிடையே சாக் கிராலி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் ஒரு வரலாற்று சாதனையை படைத்திருக்கிறார்.





அதாவது அந்த சாதனை என்னவென்றால் சர்வதேச அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500- விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர் மற்றும் சர்வதேச அளவில் ஒன்பதாவது வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.


டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்தவர்கள்:



  • முத்தையா முரளிதரன் (இலங்கை) - 800 விக்கெட்டுகள்

  • ஷேன் வார்ன் (ஆஸ்திரேலியா) - 708 விக்கெட்டுகள்

  • ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து) - 695* விக்கெட்கள்

  • அனில் கும்ப்ளே (இந்தியா) - 619 விக்கெட்டுகள்

  • ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து) - 604 விக்கெட்கள்

  • கிளென் மெக்ராத் - 604 விக்கெட்டுகள்

  • கர்ட்னி வால்ஷ் (வெஸ்ட் இண்டீஸ்) - 519 விக்கெட்டுகள்

  • நாதன் லயன் (ஆஸ்திரேலியா) - 517* விக்கெட்கள்

  • ரவிச்சந்திரன் அஷ்வின் (இந்தியா)- 500*


இரண்டாவது வேகமான முதல் 500 டெஸ்ட் விக்கெட்டுகள்


இலங்கையின் முத்தையா முரளிதரனுக்குப் பிறகு 100-க்கும் குறைவான டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றிருக்கிறார். அதிவேகமாக 50, 100, 150, 200, 350, 400 மற்றும் 450 டெஸ்ட் விக்கெட்டுகளை எட்டிய இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள அஸ்வின், உலகிலேயே அதிவேகமாக 250 மற்றும் 300 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய சர்வதேச வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் படிக்க: India vs England 3rd Test: தவறான புரிதலால் அவுட் ஆவது சகஜம்தான் - ரன் அவுட் குறித்து பேசிய சர்ஃபராஸ் கான்!


 


மேலும் படிக்க: Sarfaraz Khan: சர்ஃபராஸ் கான் ரன் அவுட்.. கடுமையாக சாடிய ரசிகர்கள்! வருத்தம் தெரிவித்த ஜடேஜா!