டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர் என்ற சாதனை பட்டியலில் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் 51 சதங்கள் அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த படியாக டெஸ்டில் அதிக சதம் அடித்தவர்களில் ஜாக் காலிஸ் (45 சதங்கள்), ரிக்கி பாண்டிங் (41 சதங்கள்) உடன் 2 மற்றும் 3 வது இடத்தில் இருக்கின்றனர். 

டாப் 10 லில் 3 இந்தியர்கள்: 

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கார 38 சதங்களுடன் 4வது இடத்திலும், ராகுல் டிராவிட் 36 சதங்களுடன் 5வது இடத்திலும் இருக்கின்றனர். இவர்களை தொடர்ந்து,பாகிஸ்தானின் யூனிஸ் கான் (34 சதங்கள்), இந்தியாவின் சுனில் கவாஸ்கர் (34 சதங்கள்), மேற்கிந்திய தீவுகளின் பிரையன் லாரா (34 சதங்கள்), இலங்கையின் மஹேல ஜெயவர்த்தனே (34 சதங்கள்), இங்கிலாந்தின் அலஸ்டர் குக் (33 சதங்கள்) ஆகியோர் டாப் 10 பட்டியலில் உள்ளனர். 

Fab-4 இன் நிலை என்ன..? 

ஃபேப் ஃபோர்  என்பது 'ஃபேபுலஸ் ஃபோர்' என்பதன் சுருக்கம். இது நவீன காலத்தில் ஆக்டிவாக இருக்கும் நான்கு டெஸ்ட் பேட்ஸ்மேன்களை குறிக்கிறது. அதன்படி, இந்தியாவின் விராட் கோலி, ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகியோர் ஆவர். ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் தற்போது 31 டெஸ்ட் சதங்களை அடித்துள்ள நிலையில், இங்கிலாந்து வீரர் ரூட் 30 சதங்களை அடித்துள்ளார். கேன் வில்லியம்சன் மற்றும் விராட் கோலி தலா 28 சதங்களை அடித்துள்ளனர். 

ஃபேப்-4 ரன் குவிப்பத்தில் ஜோ ரூட் முதலிடம் : 

ஃபேப்-4 ஜோ ரூட் டெஸ்ட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர் 11,122 ரன்கள் அடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக, ஸ்டீவ் ஸ்மித் 8,947 ரன்களும், விராட் கோலி 8479 ரன்களுடன் 2 மற்றும் 3 ம் இடத்தில் உள்ளனர். கேன் வில்லியம்சன் 8124 ரன்களுடன் 4வது இடத்தில் இருக்கிறார். 

இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் சதம் அடித்தவர்கள் பட்டியல்:

எண்

வீரர்கள்

ஆண்டுகள்

போட்டிகள்

சதம்

1

சச்சின் டெண்டுல்கர்

1989-2013

200

51

2

ராகுல் டிராவிட்

1996-2012

163

36

3

சுனில் கவாஸ்கர்

1971-1987

125

34

4

விராட் கோலி

2011-2023

108 28

5

வீரேந்திர சேவாக்

2001-2013

103

23

6

முகமது அசாருதீன்

1984-2000

99

22

7

சேதேஷ்வர் புஜாரா

2010-2023

101

19

8

திலீப் வெங்சர்க்கார்

1976-1992

116

17

9

விவிஎஸ் லட்சுமணன்

1996-2012

134

17

10

சௌரவ் கங்குலி

1996-2008

113

16