தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட்:
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு 5 நாள் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், கே.எல்.ராகுல் ஆகிய சீனிய வீரர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.
இந்நிலையில் தன்னுடைய முதல் நாள் பயிற்சியை தொடங்கிய மோர்னே மோர்கல் இந்திய வீரர்கள் குறித்து பேசியுள்ளார்.
அதில், "இது என்னுடைய முதல் பணி. அதனால் இந்திய அணி வீரர்கள் குறித்து அறிந்து கொள்வது தான் நோக்கமாக இருந்தது. இந்திய அணியின் சில வீரர்களுக்கு எதிராக விளையாடி இருக்கிறேன். சிலருடன் ஐபிஎல் தொடரின் போது பழகியிருக்கிறேன். தற்போது இந்திய அணியுடன் சேர்ந்து பயணிப்பதால், அவர்களுடன் நல்ல உறவில் இருப்பது அவசியமாகும். அதனால் முதல் நாளிலேயே அவர்களின் மனநிலையையும், திட்டங்களையும் புரிந்து கொள்வது தான் நோக்கமாக இருந்தது. அவர்களின் வலிமை, சிக்கல்களை புரிந்து கொண்டு ஒவ்வொரு தொடருக்கும் ஏற்ப இலக்கு நிர்ணயித்து செயல்பட விரும்புகிறேன்.
இந்திய அணியின் பவுலர்களின் தயாரிப்பு பணிகள் ஆச்சரியமாக உள்ளது. இதை மிகச்சிறந்த விஷயமாக நினைக்கிறேன். இந்த இடத்தில் இருந்து அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்"என்று கூறினார். மேலும், "என்னை இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக தேர்வு செய்ததை நான் முதலில் என் தந்தையிடம் தான் சொன்னேன்.அவர் என்னிடம் பேசினார், நான் என் மனைவியிடம் கூட செல்லவில்லை"என்றார்.
மேலும் படிக்க: IND vs BAN 1st Test:வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்.. மைதானத்திற்கு ரெடியான அஸ்வின்! மனைவி வெளியிட்ட முக்கிய பதிவு
மேலும் படிக்க: IPL 2025 Dhoni:பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி.. கோபத்தில் எட்டி உதைத்த தோனி! உண்மையை உடைத்த சிஎஸ்கே வீரர்