ஐசிசி உலகக் கோப்பை தொடரில் முதல் அரையிறுதிச் சுற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று (நவம்பர் 15) நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்களை குவித்து. விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஆகியோர் அதிரடியாக சதம் விளாசினார்கள்.


இந்த போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.


அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்:



இந்த தொடரில் சிறப்பாக தன்னுடைய பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார் இந்திய பந்து வீச்சாளர் முகமது ஷமி(Mohammed Shami). தன்னுடைய பந்து வீச்சால் எதிரணி வீரர்களை மிரள வைத்து வருகிறார். 
 
அதன்படி, அவர் நடப்பு உலகக் கோப்பையில் 6 இன்னிங்ஸ்களில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.  முன்னதாக, கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அற்புதமாக பந்து வீசினார் ஷமி.


அந்த போட்டியில் 10 ஓவர்கள் வீசிய ஷமி 54 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 7 ஓவர்கள் வீசி 2 ஓவர்களை மெய்டன் செய்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஷமி.  தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 2 விக்கெட்டுகள், இன்று நடைபெற்ற  நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுகள் என இந்த தொடரில் மட்டும் மொத்தம் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.


53 விக்கெட்டுகள்:


இச்சூழலில், ஒட்டிமொத்தமாக சர்வதேச உலகக் கோப்பையில் இது வரை 17 இன்னிங்ஸ்கள் விளையாடி உள்ள முகமது ஷமி 53 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகக் கோப்பை போட்டியில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.


முன்னதாக, 33 இன்னிங்ஸ்கள் விளையாடியுள்ள ஜாகிர் கான் 44 விக்கெட்டுகள் எடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் இருக்கும் ஸ்ரீ நாத் 33 இன்னிங்ஸ்கள் விளையாடி 44 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 19 இன்னிங்ஸ்கள் விளையாடி உள்ள ஜஸ்பிரித் பும்ரா 35 விக்கெட்டுகளை வீழ்த்தி நான்காவது இடத்திலும், உலகக் கோப்பையில் 18 இன்னிங்ஸ்கள் விளையாடிய அனில் கும்ளே 31 விக்கெட்டுகள் வீழ்த்தி 5 வது இடத்தில் இருக்கிறார்.


 


 


மேலும் படிக்க: Virat Kohli: அதிக ரன்கள், அதிக அரைசதம்... சாதனை மேல் சாதனை செய்யும் விராட் கோலி! விவரம் இதோ!


 


மேலும் படிக்க: Shubman Gill: திணறும் நியூசிலாந்து: அதிரடியாக அரைசதம் விளாசி தசைப்பிடிப்பால் வெளியேறிய சுப்மன் கில்!