அர்ஜூனா விருது வாங்கிய 58வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி பெற்றுள்ளார். 






கிரிக்கெட்டுக்காக அர்ஜூனா விருது பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை சலீம் துரானி பெற்றார். முகமது ஷமிக்கு முன்னதாக கடைசி இந்த விருதை கடந்த 2021ம் ஆண்டு ஷிகர் தவான் பெற்றார். கடந்த ஆண்டு இந்த விருதுக்கு எந்த கிரிக்கெட் வீரரும் பரிந்துரைக்கப்படவில்லை. ஆனால், இந்த முறை முகமது ஷமி இந்த விருதை பெற்றார். இந்தாண்டு முகமது ஷமியுடன் 23 வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. 


இந்தநிலையில், சலீம் துரானி முதல் முகமது ஷமி வரை அர்ஜூனா விருது பெற்ற 58 கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனை யார் யார் என்பதை இந்த பட்டியலில் பார்க்கலாம். 


இதுவரை 12 பெண்கள் உட்பட 58 கிரிக்கெட் வீரர்கள் அர்ஜுனா விருது பெற்றுள்ளனர். மன்சூர் அலி கான் பட்டோடி , சுனில் கவாஸ்கர் , கபில் தேவ் , சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி போன்ற முன்னாள், இந்நாள் வீரர்களும் அர்ஜுனா விருதை வென்றுள்ளனர்.


சலீம் துரானி - அர்ஜுனா விருது பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் வீரர்: 


அர்ஜுனா விருது பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் வீரர் சலீம் துரானி ஆவார் . இவருக்கு கடந்த 1961 ம் ஆண்டு இந்த விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.  இடது கை ஆர்த்தடாக்ஸ் பந்து வீச்சாளர் ஆல்-ரவுண்டரான சலீம் துரானி, ஆப்கானிஸ்தானில் பிறந்து இந்தியாவுக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 1202 ரன்கள் மற்றும் 75 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 1961-62ல் இங்கிலாந்துக்கு எதிராக கொல்கத்தா மற்றும் சென்னையில் முறையே 8 மற்றும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதைத் தொடர்ந்து துரானி வழிபாட்டு நபராக ஆனார்.


சாந்தா ரங்கசாமி- அர்ஜுனா விருது பெற்ற முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை:


கடந்த 1976 ஆம் ஆண்டு அர்ஜுனா விருதைப் பெற்ற முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை சாந்தா ரங்கசாமி ஆவார் . இவர் 1976 முதல் 1991 வரை இந்தியாவுக்காக 16 டெஸ்ட் மற்றும் 19 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். பிசிசிஐ-யிடமிருந்து வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்ற முதல் பெண் கிரிக்கெட் வீரரும் இவரே ஆவார். இவரது தலைமையின் கீழ், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 1976 இல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தது. அதே ஆண்டுதான் அவர் அர்ஜுனா விருதும் வழங்கப்பட்டது. 


கிரிக்கெட்டுக்கான அர்ஜுனா விருது: வென்றவர்களின் பட்டியல்


(மகளிர் வீராங்கனைகளின் பெயர்கள் போல்ட் செய்யப்பட்டுள்ளது)


1961 - சலீம் துரானி


1964 - மன்சூர் அலி கான் பட்டோடி


1965 - விஜய் மஞ்சரேக்கர்


1966 - சந்து போர்டே


1967 - அஜித் வடேகர்


1968 - எரபள்ளி அனந்தராவ் ஸ்ரீனிவாஸ்


1969 - பிஷன் சிங் பேடி


1970 - திலீப் சர்தேசாய்


1971 - ஸ்ரீனிவாசராகவன் வெங்கடராகவன்


1972 - பகவத் சுப்ரமணிய சந்திரசேகர் மற்றும் ஏக்நாத் சோல்கர்


1975 - சுனில் கவாஸ்கர்


1976 - சாந்த ரங்கசாமி


1977-78 - குண்டப்பா விஸ்வநாத்


1979-80 - கபில் தேவ்


1980-81 - சேத்தன் சவுகான் மற்றும் சையத் கிர்மானி


1981 - திலீப் வெங்சர்க்கார்


1982 - மொஹிந்தர் அமர்நாத்


1983 - டயானா எடுல்ஜி


1984 - ரவி சாஸ்திரி


1985 - சுபாங்கி குல்கர்னி


1986 - சந்தியா அகர்வால் மற்றும் முகமது அசாருதீன்


1989 - மதன் லால்


1993 - மனோஜ் பிரபாகர் மற்றும் கிரண் மோர்


1994 - சச்சின் டெண்டுல்கர்


1995 - அனில் கும்ப்ளே


1996 - ஜவகல் ஸ்ரீநாத்


1997 - சௌரவ் கங்குலி மற்றும் அஜய் ஜடேஜா


1998 - ராகுல் டிராவிட் மற்றும் நயன் மோங்கியா


2000 - வெங்கடேஷ் பிரசாத்


2001 - வி.வி.எஸ்.லக்ஷ்மன்


2002 - வீரேந்திர சேவாக்


2003 - மிதாலி ராஜ் மற்றும் ஹர்பஜன் சிங்


2005 - அஞ்சு ஜெயின்


2006 - அஞ்சும் சோப்ரா


2009 - கௌதம் கம்பீர்


2010 - ஜூலன் கோஸ்வாமி


2011 - ஜாகீர் கான்


2012 - யுவராஜ் சிங்


2013 - விராட் கோலி


2014 - ரவிச்சந்திரன் அஸ்வின்


2015 - ரோஹித் சர்மா


2016 - அஜிங்க்யா ரஹானே


2017 - ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் சேதேஷ்வர் புஜாரா


2018 - ஸ்மிருதி மந்தனா


2019 - ரவீந்திர ஜடேஜா மற்றும் பூனம் யாதவ்


2020 - தீப்தி சர்மா மற்றும் இஷாந்த் சர்மா


2021 - ஷிகர் தவான்


2023 - முகமது ஷமி