MLC 2023: முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் சியாடடில் ஓர்காஸ்.. ரன் மழை பொழியும் ரஸல்.. டாப் லிஸ்ட் இதோ!

MLC 2023: சியாடடில் ஓர்காஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் ஆகிய அணிகள் டெக்சாஸ்  அணியை பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளது.

Continues below advertisement

மேஜர் லீக் கிரிக்கெட்(எம்.எல்.சி) என்ற கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த போட்டி கடந்த ஜூலை 12 ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 30 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை மொத்தம் 13 போட்டிகள் நடைபெற்று உள்ளன. ஆரம்பத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தற்போது சியாடடில் ஓர்காஸ், வாஷிங்டன் ஃப்ரீடம் ஆகிய அணிகள் டெக்சாஸ் அணியை பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளது.

Continues below advertisement

சியாடடில் ஓர்காஸ் 3 போட்டிகளில் விளையாடி 3 வெற்றியை பெற்று முதல் இடத்திலும், 4 போட்டிகளில் விளையாடிய வாஷிங்டன் ஃப்ரீடம் இரண்டில் மட்டும் வெற்றிப்பெற்று இரண்டாவது இடத்திலும், 3 போட்டிகளில் விளையாடிய  எம் ஐ நியூ யார்க் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 3வது இடத்திலும் உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் இதுவரை நடந்த 4 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.


புள்ளிப் பட்டியல்

3 3 0 6 +1.254
 
வாஷிங்டன் ஃப்ரீடம்
4 2 0 4 +0.632
எம் ஐ நியூ யார்க்
3 2 1 4 +0.276
டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்
3 2 1 4 +0.133
சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ்
3 1 2 2 +1.100
 லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்
4 0 4 0 -2.675
அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்
 
ஐந்து போட்டிகளில் விளையாடி 206 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல். கோரி ஆண்டர்சன் நான்கு போட்டிகளில் விளையாடி 176 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும், 4 போட்டிகளில் விளையாடிய நிக்கோலஸ் பூரன் 156 ரன்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

 
சிறந்த பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்ஸ்

ஷாட்லி வான் ஷால்க்விக்  ஒரே ஒரு  போட்டிகளில் மட்டும் விளையாடி 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முதல் இடத்தில் உள்ளார். டிம் டேவிட்டும் மூன்று போட்டிகளில் விளையாடி 183.82 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இரண்டாம் இடத்திலும், 4 போட்டிகளில் விளையாடிய ஹென்ரிச் கிளாசன் 177.94 ஸ்ட்ரைக் ரேட்டுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

அதிக விக்கெட் எடுத்த வீரர்கள்

கேமரூன் கெனன் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை எடுத்து முதல் இடத்தில் உள்ளார். ஆடம் ஜாம்பா ஐந்து  போடிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும், முகமது மொஹ்சின் 4 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை எடுத்து  மூன்றாம் இடத்தில் உள்ளனர்.

பெஸ்ட் பௌலிங் எகானமி

நாங்கு போட்டிகளில் விளையாடி 6.32 எகானமியுடன் முதல் இடத்தில் கேமரூன் கெனன் உள்ளார் . 6.4 எகானமியுடன் சுனில் நரைன் இரண்டாம் இடத்திலும், இமாத் வாசிம் 6.18 எகானமியுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

 
Continues below advertisement
Sponsored Links by Taboola