MLC 2023: மீண்டும் புள்ளி பட்டியலில் முன்னேறியுள்ள டெக்சாஸ்.. அதிரடியாக ஆடும் ஆண்ட்ரே ரஸ்ஸல்.. டாப் லிஸ்ட்!

நேற்று நடந்த போட்டியில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியை விழ்த்தி மீண்டும் புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது.

Continues below advertisement

மேஜர் லீக் கிரிக்கெட்(எம்.எல்.சி) என்ற கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த போட்டி கடந்த ஜூலை 12 ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 30 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை மொத்தம் 13 போட்டிகள் நடைபெற்று உள்ளன. டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் ஆரம்பம் முதலே  ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் சமீபத்தில் நடந்த போட்டியில் சியாடடில் ஓர்காஸ், வாஷிங்டன் ஃப்ரீடம் ஆகிய அணிகள் டெக்சாஸ் அணியை பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளது. இதில் இருந்து மீண்டுவந்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், நேற்று நடந்த போட்டியில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியை விழ்த்தி மீண்டும் புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது.

Continues below advertisement


சியாடடில் ஓர்காஸ் 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றியை பெற்று முதல் இடத்திலும், 5 போட்டிகளில் விளையாடிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மூன்றில் மட்டும் வெற்றிப்பெற்று இரண்டாவது இடத்திலும், 5 போட்டிகளில் விளையாடிய வாஷிங்டன் ஃப்ரீடம் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று 3வது இடத்திலும் உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் இதுவரை நடந்த 5 போட்டிகள் விளையாடி தற்போது தான் முதல் போட்டியில் வெற்றிப்பெற்று உள்ளது.

புள்ளி பட்டியல்

Continues below advertisement
Sponsored Links by Taboola