டெஸ்ட் தொடருக்கு பிறகு, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையே மூன்று போட்டிகல் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே ஒருநாள் தொடருக்கான அணியை அறிவித்த நிலையில், தற்போது கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் ஜூலை 27 முதல் தொடங்கும் ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சில வீரர்கள் திரும்பியுள்ள நிலையில், சில அனுபவ வீரர்கள் அணியில் இருந்து வெளியேறியுள்ளனர். அதன்படி, நிக்கோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர் போன்ற வீரர்கள் அணியில் இடம் பெறவில்லை, அதிரடி ஆட்டக்காரர் ஷிம்ரன் ஹெட்மையர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் கேப்டனாக இருப்பார் என்றும், துணை கேப்டன் ரோவ்மன் பவல் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தில் இருந்து மீண்ட வேகப்பந்து வீச்சாளர் ஜடன் சீல்ஸ், லெக் ஸ்பின்னர் யானிக் கரியா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் குடாகேஷ் மோதி ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் தலைமை தேர்வாளர் கூறுகையில், "ஓஷானே தாமஸ் மற்றும் ஷிம்ரோன் ஹெட்மயர் மீண்டும் அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஷிம்ரோன் ஃபினிஷராக விளையாட முடியும், அவரது வருகை மிடில் ஆர்டரை பலப்படுத்தும்." என்று தெரிவித்தார்.
ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி :
ஷாய் ஹோப் (கேப்டன்), ரோவ்மன் பவல் (துணை கேப்டன்), அலிக் அதானாஜ், யானிக் காரியா, கேசி கார்டி, டொமினிக் டிரேக்ஸ், ஷிம்ரோன் ஹெட்மையர், அல்சாரி ஜோசப், பிரெண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடாகேஷ் மோதி, ஜேய்டென் சீல்ஸ், ரோமர் ரோமர் செப்பர்டு, கெவின் சின்சியோல், ஓசேன் தாமஸ்
ஒருநாள் தொடரின் அட்டவணை:
- முதல் ஒருநாள் போட்டி - ஜூலை 27 - கென்சிங்டன் ஓவல், பார்படாஸ்
- இரண்டாவது ஒருநாள் போட்டி - ஜூலை 29 - கென்சிங்டன் ஓவல், பார்படாஸ்
- மூன்றாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 1 - பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி, டிரினிடாட்
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷர்துல் தாக்கூர், ஆர். ஜடேஜா, அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், முகமது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.