MLC 2023: ஹாட்ரிக் வெற்றியுடன் முதலிடம் தொட்ட சியாடடில் ஓர்காஸ்.. டாப் 3 இடத்தை பிடித்த வீரர்கள் யார் யார்..? முழு லிஸ்ட்!

MLC 2023:இதுவரை டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் அவர்களின் நம்பிக்கையை உடைக்கும் விதமாக சியாடடில் ஓர்காஸ் அணி 16 ஓவரிலேயே வெற்றி பெற்றது

Continues below advertisement

மேஜர் லீக் கிரிக்கெட்(எம்.எல்.சி) என்ற கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த போட்டி கடந்த ஜூலை 12 ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 30 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை மொத்தம் 10 போட்டிகள் நடைபெற்று உள்ளன. இதில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் அவர்களின் நம்பிக்கையை உடைக்கும் விதமாக சியாடடில் ஓர்காஸ் அணி 16 ஓவரிலேயே வெற்றி பெற்றது.

Continues below advertisement

சியாடடில் ஓர்காஸ் 3 போட்டிகளில் விளையாடி 3 வெற்றியை பெற்று முதல் இடத்திலும், 4 போட்டிகளில் விளையாடிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் இரண்டில் மட்டும் வெற்றிப்பெற்று இரண்டாவது இடத்திலும், 3 போட்டிகளில் விளையாடிய வாஷிங்டன் ஃப்ரீடம் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 3வது இடத்திலும் உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் இதுவரை நடந்த 4 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.


புள்ளிப் பட்டியல்

 

            அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளி என்.ஆர்.ஆர்
 சியாடடில் ஓர்காஸ்
3 3 0 6 +1.254
டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்
4 2 0 4 +0.632
 
வாஷிங்டன் ஃப்ரீடம்
3 2 1 4 +0.276
 
சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ்
3 2 1 4 +0.133
எம் ஐ நியூ யார்க்
3 1 2 2 +1.100
 லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்
4 0 4 0 -2.675
 
அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்
 
நான்கு போட்டிகளில் விளையாடி 169 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல். கோரி ஆண்டர்சன் மூன்று போட்டிகளில் விளையாடி 142 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும், 3 போட்டிகளில் விளையாடிய பிராவோ 136 ரன்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
 
 
சிறந்த பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்ஸ்

சுபம் ரஞ்சனே இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி 225 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முதல் இடத்தில் உள்ளார். டிம் டேவிட்டும் மூன்று போட்டிகளில் விளையாடி 183.82 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இரண்டாம் இடத்திலும், 3 போட்டிகளில் விளையாடிய மேத்யூ வேட் 176.19 ஸ்ட்ரைக் ரேட்டுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

அதிக விக்கெட் எடுத்த வீரர்கள்

டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி முகமது மொஹ்சின் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை எடுத்து முதல் இடத்தில் உள்ளார். வெய்ன் பார்னெல் மூன்று போடிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும், ஆடம் ஜாம்பா 3 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை எடுத்து ஆவரேஜ் அடிப்படையில் மூன்றாம் இடத்தில் உள்ளனர்.

பெஸ்ட் பௌலிங் எகானமி

மூன்று போட்டிகளில் விளையாடி 5.36 எகானமியுடன் முதல் இடத்தில் ஹர்மீத் சிங் உள்ளார் . 6.13 எகானமியுடன் சுனில் நரைன் இரண்டாம் இடத்திலும், ஆண்ட்ரூ டை 6.18 எகானமியுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola