Pakistan A vs India A Asia Cup Final: ஆசிய அளவிலான கிரிக்கெட் போட்டி ஜூனியர் வீரர்களுக்கு இடையில் கடந்த 13ஆம் தேதி லீக் போட்டிகள் நடைபெற்றன. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, ஓமன், ஆஃப்கானிஸ்தான், ஐக்கிய அமீரகம், நேபாள் என மொத்தம் 8 அணிகள் களமிறங்கின. இதில் ஸ்ரீலங்கா, பங்களாதேஷ், ஓமன் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் குரூப் ’ஏ’ வாகவும், இந்தியா பாகிஸ்தான், நேபாள் மற்றும் ஐக்கிய அமீரகம் குரூப் ’பி’வாகவும் பிரிக்கப்பட்டது. 


ஒவ்விரு குழுவில் உள்ள அணியும் தனது குழுவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ஸ்ரீலங்கா, பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதிப் போட்டியில் ஸ்ரீலங்கா அணி பாகிஸ்தானையும், இந்திய அணி பங்களாதேஷையும் எதிர்கொண்டது. 


நேற்று அதாவது ஜூலை 21ஆம் தேதி நடைபெற்ற இந்த போட்டிகளில் முதலில் நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த, பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 322 ரன்கள் சேத்தது. இதன் பின்னர் இமாலய இலக்குடன் களமிறங்கிய ஸ்ரீலங்கா அணி 45.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ரன்கள் மட்டும் தான் எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது மட்டும் இலாமல் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. 


இரண்டாவது நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டன. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்த போட்டியில் இந்தியா வெல்லுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களான, நிஷந்த் சிந்து 5 விக்கெட்டுகளும், மனவ் சுந்தர் 3 விக்கெடுகளும் வீழ்த்தி அட்டகாசப்படுத்தினர். இதனால் பங்களேதேஷ் அணி 34.2 ஓவர்களில் 160 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 


ஏற்கனவே பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி இலங்கை கொழுபில் உள்ள பிரமதேசா மைதானத்தில் நடைபெறவுள்ளது. நாளை மதியம் 2 மணிக்கு நடைபெறும் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. அதேபோல், இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற லீக் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.