மேஜர் லீக் கிரிக்கெட்(எம்.எல்.சி) என்ற கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த போட்டி கடந்த ஜூலை 12 ஆம் தேதி தொடங்கப்பட்டு தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. நேற்று, முதல் போட்டியாக எலிமினேட்டர் சுற்றில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி எம்ஐ நியூயார்க் அணியை எதிர்கொண்டது . இதில் எம்ஐ நியூயார்க் வெற்றி பெற்று தகுதி சுற்று இரண்டுக்கு முன்னேறியது.
இரண்டாவது போட்டியாக நடந்த தகுதி சுற்று 1 ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி சியாட்டில் ஓர்காஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய சியாட்டில் ஓர்காஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபாரமான வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை நடக்கும் தகுதி சுற்று 2 போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும் எம்ஐ நியூயார்க் அணியும் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு முன்னேறும்
ட்ரெண்ட் போல்ட் மூன்று போட்டிகளில் மட்டும் விளையாடி 223.07 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முதல் இடத்தில் உள்ளார். ஹென்ரிச் கிளாசன் ஐந்து போட்டிகளில் விளையாடி 206.25 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இரண்டாம் இடத்திலும், ஷாட்லி வான் ஷால்க்விக் ஒரே ஒரு போட்டிகளில் மட்டும் விளையாடி 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
அதிக விக்கெட் எடுத்த வீரர்கள்
ட்ரெண்ட் போல்ட் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை எடுத்து முதல் இடத்தில் உள்ளார். கேமரூன் கெனன் ஆறு போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும், ஆண்ட்ரூ டை 6 விளையாடி 11 விக்கெட்டுகளை எடுத்து மூன்றாம் இடத்தில் உள்ளனர்.
பெஸ்ட் பௌலிங் எகானமி
மூன்று போட்டிகளில் விளையாடி 5.9 எகானமியுடன் முதல் இடத்தில் நோஸ்துஸ் கெஞ்சிகே உள்ளார் . 6.39 எகானமியுடன் இமாத் வாசிம் இரண்டாம் இடத்திலும், சுனில் நரைன் 6.4 எகானமியுடன் நான்கு இடத்திலும் உள்ளனர்.