கடந்த சில ஆண்டுகளில், பல இந்திய வீரர்கள் அறிமுக வீரர்களாக களமிறங்கி உள்ளனர். ஆனால் ரிஷப் பண்ட்-ஐ தவிர, இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கான இடத்தை வேறு எந்த வீரரும் பதிவு செய்யவில்லை. முகமது சிராஜ், சுபம் கில், மயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, ஹனுமா விஹாரி போன்ற இளம் வீரர்கள் இன்னும் வலுவான இடத்தைப் பிடிக்கவில்லை.
உலகக் கோப்பை வென்ற முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க், ப்ரித்வி ஷாவை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். "சேவாக்கை போன்ற அதிரடி கிரிக்கெட் வீரர் அவர் (ப்ரித்வி ஷா) கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர் சேவாக். எனக்கு மிகவும் பிடித்த வீரர் அவர். அதே போல, இந்திய கிரிக்கெட் அணி, ப்ரித்வி ஷா மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அவர் ஒரு இளம் வீரர். இப்போதே அவர் மீது அதிக எதிர்ப்பார்ப்பு வைத்திருப்பது அவருக்கு சவாலானதாக இருக்கும். அடிலேட் டெஸ்ட் போட்டியில் அவர் சரியாக ஆடாமல் இருந்திருக்கலாம். ஆனால், அவர் தனது திறமனை மெருகேற்றிக் கொள்வார் என நான் நம்புகிறேன்” என தெரிவித்திருக்கிறார்.
2018-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ப்ரித்வி ஷாவுக்கு, இப்போது 22 வயதே ஆகிறது. அவர் மீது அதிக எதிர்ப்பார்ப்பு இருப்பதால், சிறப்பாக விளையாட வேண்டும் என கிரிக்கெட் வட்டாரம் கருத்து தெரிவித்து வருகிறது. விரைவில், சிறப்பான ஆட்டத்தை தக்க வைத்து கொண்டு தனக்கான ஒரு இடத்தை இந்திய கிரிக்கெட் அணியில் பிடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்