காமிக் பிரியர்களுக்கும் எம்எஸ் தோனி ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் வகையில், மிடாஸ் டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து விர்சு ஸ்டுடியோ 'அதர்வா - தி ஆரிஜின்' என்ற நாவலை உருவாக்கியுள்ளது. மெகா பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்த நாவலின் மோஷன் போஸ்டரை தோனி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.
சூப்பர் ஹீரோவாகவும், போர்வீரர் தலைவராகவும் பிரபல கிரிக்கெட் வீரர் தோனியை தவிர வேறு யாரும் இதில் நடிக்கவில்லையாம். இந்த நாவலை ரமேஷ் தமிழ்மணி எழுதியுள்ளார். எம்.வி.எம். வேல் மோகன் தலைமையில், வின்சென்ட் அடைக்கலராஜ் மற்றும் அசோக் மேனர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த எம்.எஸ்.தோனி, “இந்த திட்டத்துடன் இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையில் இது ஒரு அற்புதமான முயற்சி. அதர்வா - தி ஆரிஜின் நாவல் ஈர்ப்பு மிகுந்த கதை. அதிவேகமான கலைப்படைப்புகளுடன் வசீகரிக்கும் வகையில் இந்த கிராஃபிக் நாவல் உருவாகியுள்ளது. இந்தியாவின் முதல் புராண சூப்பர் ஹீரோவை சமகாலத் திருப்பத்துடன் வெளியிடும் எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணியின் முயற்சி, ஒவ்வொரு வாசகருக்கும் மேலும் பலவற்றைத் தேடித் தரும்.” என்றார்.
எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணி, “அதர்வா - தோற்றம் ஒரு கனவுத் திட்டம். இதனை ஒரு தலைசிறந்த படைப்பாக மொழிபெயர்க்க நாங்கள் பல ஆண்டுகளாக உழைத்துள்ளோம். எம்.எஸ். தோனி அதர்வாவாக நடித்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எம்.எஸ். தோனியின் கதாபாத்திரம் உட்பட நாவலில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் கலைப்படைப்புகளும் விரிவான ஆராய்ச்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்டு, உலகின் ஒவ்வொரு நுணுக்கமும் விரிவாகக் கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப்புத்தகம் எங்கள் ஆர்வத்திற்கு ஒரு சான்று. திரு.எம்.வி.எம்.வேல் மோகன் மற்றும் எனது தயாரிப்பாளர்களான வின்சென்ட் அடைக்கலராஜ் மற்றும் அசோக் மேனர் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் அவர்கள் இல்லாமல் இந்தத் திட்டம் சாத்தியமாகியிருக்காது.” என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்