MI-W vs vs UPW-W:- மகளிர் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளில் வென்று புள்ளிபட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 


மகளிர் பிரீமியர் லீக் போட்டித் தொடரின் லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும் உத்தர பிரதேச வாரியர்ஸ் அணியும் மோதிக்கொண்டன. போட்டித் தொடரின் 10 போட்டியான இது மும்பை பார்பவுர்ணி மைதானத்தில் நடைபெற்றது.  இதுவரை தான் போட்டியிட்ட மூன்று போட்டிகளிலும் வென்று மும்பை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மேலும் அந்த மூன்று போட்டிகளிலும் எதிரணியினரின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியிருந்தனர் என்பது அந்த அணியின் பவுலிங் திறமையினை காட்டுகிறது எனலாம். 


டாஸ் வென்ற உத்தர பிரதேச அணி பேட்டின் தேர்வு செய்தது.  அந்த அணி பவர்ப்ளே முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 48 ரன்கள் சேர்த்து இருந்தனர்.  பவர்ப்ளே வரை நிதானமாக ஆடிவந்த அலிசாவும் மெக்ரத்தும் அதன் பின்னர் ஆட்டத்தின் போக்கை அதிரடியாக மாற்றினர். சுழன்று சுழன்று பவுண்டரிகளை பறக்கவிட்ட அவர்கள் மும்பை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். அடுத்தடுத்து அரைசதம் அடித்த இவர்கள் இஷகாவின் ஒரே ஓவரில் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். அதன் பின்னர் யாரும் சிறப்பாக விளையாடாததால், 20 ஓவர்கள் முடிவில் உத்தர பிரதேச அணி 159 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்த அணியின் சார்பில், அலீசா 58 ரன்களும் மெக்ரத் 50 ரன்களும் சேர்த்தனர்.  மும்பை அணி சார்பில், இஷாக் மூன்று விக்கெட்டுகளும் அமீலா கெர் இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 


அதன் பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் சிறப்பாக தனது இன்னிங்ஸை தொடங்கியது. ஆனாலும் நிதானமாகி பவர்ப்ளேவில் விக்கெட்டை பறிகொடுக்காமல் ஆடினர். பவர்ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் சேர்த்து இருந்தனர். ஆனால் அதன் பின்னர் 7வது மற்றும் 8வது ஓவரில் தொடக்க ஆட்டக்காரர்கள் மேத்யூஸ் மற்றும் பாட்டியா இருவரும் ஆட்டமிழக்க, அதன் பின்னர் மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஷிவர் பர்ண்ட் இருவரும் உத்தர பிரதேச அணியின் பந்து வீச்சை சிரமமின்றி எதிர் கொண்டு வந்தனர். 15 ஓவர்களில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் சேர்த்து இருந்தது. 


16வது ஓவரில் மட்டும் மூன்று பவுண்டரியும் ஒரு சிக்ஸரும்  ஹர்மன்ப்ரீத் கவுர் விளாச மும்பை அணிக்கு அது வெற்றி இலக்கிற்கு அருகில் அழைத்துச் சென்றது. அதன் பின்னர் ஓவர்களில் மும்பை அணி 164 ரன்கள் எடுத்து தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் 53 ரன்களுடனும் ஷிவர் பிரண்ட் 45 ரன்களுடனும் இறுதிவரை களத்தில் இருந்தனர்.  இதுவரை தான் எதிர்கொண்ட அணியை வெற்றி பெற்று மும்பை அணி தொடர்ந்து 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளனர்.