மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீ ஆபத்துதாரண ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் உலக கோப்பை கிரிகெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற வேண்டி கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர். 15 -வது உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த அக்டோபர் 5 -ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக தொடங்கியது. சென்னை, டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா, அஹமதாபாத், தர்மசாலா, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய 10 இடங்களில் இந்த உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்றது. மேலும் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, வங்கதேசம், இங்கிலாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றது. 




அக்டோபர் 5 -ஆம் தேதி முதல் நவம்பர் 12 -ஆம் தேதி வரை நடைபெற்ற லீக் போட்டிகள் முடிவில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதியது. இதன் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தது. நவம்பர் 15 -ஆம் தேதி நடந்த முதல் அரையிறுதியில் நியூசிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியது. நவம்பர் 16 -ஆம் தேதி நடந்த 2 -வது அரையிறுதியின் தென்னாப்பிரிக்காவை ஆஸ்திரேலியா அணி எளிதாக வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. கடந்த 2003 - ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோற்றது. இதனைத் தொடர்ந்து 4 உலகக்கோப்பை முடிந்து விட்டது.


IND vs AUS Final 2023: ரசிகர்கள் மட்டுமல்ல.. மேட்ச் பார்க்க பிரபலங்களும் வர்றாங்க.. யாரெல்லாம் தெரியுமா?




ஆனால் 20 ஆண்டுகள் கழித்து 2023 ஆம் ஆண்டில் தான் மீண்டும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் நேருக்கு நேர் மோதுகிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் பழிதீர்த்து 3 - வது முறையாக இந்திய அணி உலக கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெல்ல கிரிக்கெட் ரசிகர்களால் பல்வேறு இடங்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இறுதிப் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் மதியம் 2 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 


IND vs AUS Final Score LIVE: திணறும் இந்தியா.. கோலி அவுட்.. மைதானத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய பேட் கம்மின்ஸ்..!




மேலும், இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டி நாடு முழுவதும் பல்வேறு கோயில்களிலும், பள்ளிவாசல்களிலும், தேவாலயங்களிலும் கிரிக்கெட் ரசிகர்கள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயிலடி பகுதியில் உள்ள ஸ்ரீ ஆபத்துதாரண ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் இன்று ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு கார்த்திகை மாத சீர் வைத்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்து  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நடைப்பெற்றது. இதில் கிரிக்கெட் ரசிகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு இந்தியா அணி வெற்றி பெற வேண்டி வழிபாடு செய்தனர்.


Rohit Sharma: உலகக் கோப்பையில் 5-வது முறை! இறுதிப்போட்டியில் அரைசதத்தை தவறவிட்ட ரோகித் சர்மா - முழு விவரம்