2023 ஒரு நாள் உலகக் கோப்பை:
கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி. அதாவது இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய டிராவிஸ் ஹெட் 137 ரன்கள் எடுத்தார்.
பின்னர் வந்த மிட்செல் மார்ஸ் ஸ்டீவ் ஸ்மித் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தாலும் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் மார்னஸ் லாபுஸ்சாக்னே. அதாவது டிராவிஸ் ஹெட்டுடன் பார்டர்ஷிப் அமைத்த மார்னஸ் லாபுஸ்சாக்னே 58 ரன்கள் எடுத்தார். அதனால் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா 6வது உலகக் கோப்பையை வென்றது.
உலகக் கோப்பையில் பயன்படுத்திய பேட்டுக்கு ஓய்வு:
இந்த சூழ்நிலையில் 2023 உலகக்கோப்பை இறுதிஆட்டத்தில் இந்த வெற்றிக்கு பயன்படுத்திய பேட்டுக்கு ஓய்வு கொடுப்பதாக மார்னஸ் லாபுஸ்சாக்னே அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இது உலகக் கோப்பை இறுதிப்போட்டி பேட்டுக்கு ஓய்வு கொடுக்க வேண்டிய நேரம் என நினைக்கிறேன்'என்று கூறியிருக்கிறார்.
தற்போது இவரது பதிவை பார்த்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எங்களை வெறுப்பேற்ற வேண்டாம் என்பது போன்ற கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Watch Video: சத்தியம் கேட்ட மனு பார்க்கரின் தாய்! உறுதி கொடுத்த நீரஜ் - திருமணம் குறித்த அப்டேட்டா?