Ind vs WI, 3rd T20: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் டி20 தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதும் மூன்றாவது டி20 போட்டி வார்னர் பார்க்கில் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
இரவு 8 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்த போட்டி தற்போது ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 9.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றய போட்டி ஏற்கனவே இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கிய காரணத்தால், வீரர்களுக்கான ஓய்வு நேரம் என்பது மிகவும் குறைவாகவே இருந்துள்ளது. இதனால் போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கும் என தெரிவிக்கபப்டுள்ளது. நேற்று ஒரு போட்டி இன்று ஒரு போட்டி என வீரர்களுக்கு சரியான ஓய்வு என்பதே இல்லாத சூழலில் போட்டி நடைபெற இருப்பதால் ஒரு மணி நேரம் கால தாமதமாக போட்டியை தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதேநேரத்தில் இன்றைய போட்டி மட்டும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும், மீதமுள்ள இரண்டு டி20 போட்டிகளும் அமெரிக்காவில் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ளவர்களிடையே கிரிக்கெட் போட்டி மீது ஆர்வத்தை தூண்ட அவ்வப்போது ஐசிசி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் கடைசி இரண்டு போட்டிகளும் அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. மேலும், அடுத்த ஆண்டு அமெரிக்கவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டினை இணைக்கும் முயற்சிக்கனா செயலாகவும் பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்