துலீப் டிராபி டெஸ்ட் தொடரில் இந்தியா சி அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா டி அணி திணறி வருகிறது.


துலீப் டிராபி தொடர்:


ரசிகர்கள் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் துலீப் டிராபி தொடர் இன்று (செப்டம்பர் 5) தொடங்கியுள்ளது. அதன்படி இந்த தொடர் செப்டம்பர் 22 ஆம் தேதி முடிகிறது. துலீப் டிராபியில் மொத்தம் நான்கு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய அணியின் இளம் வீரர்களான சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோர் கேப்டன்களாக செயல்படுகின்றனர்.


இதில் ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணியும் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணியும் ஒரு போட்டியில் விளையாடி வருகிறது. அதேபோல்,மற்றொரு போட்டியில் அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணியும், சுப்மன் கில் தலைமையிலான இந்தியா எ அணியும் விளையாடி வருகின்றன.


திணரும் இந்தியா டி அணி:






இந்தியா சி அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா டி அணி திணறி வருகிறது. முதலில் டாஸ் வென்ற இந்தியா சி அணி கேப்டன் ருதுராஜ் பௌலிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அதர்வா டைட், யாஷ் தூபே சோபிக்கவில்லை. இருவரும் முறையே 4 மற்றும் 10 ரன்னில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 9 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் 0 ரன்னிலும், ரிக்கி புய் 4 ரன்னிலும், விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் 13 ரன்னிலும் சரனேஷ் ஜெய்ன் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.


47 ஓவர்களில் 8 விக்கெட்களுக்கு 160 ரன்கள் எடுத்து இந்தியா டி அணி திணறி வருகிறது. இந்தியா சி அணி தரப்பில் அனுஷ் காம்போஜ் 2 விக்கெட்டும், வைஷாக் 2 விக்கெட்டும், மனோஜ் 2 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.


மேலும் படிக்க: Rahul Dravid: RR அணியின் பயிற்சியாளர்.. ராகுல் டிராவிட் எனும் பெரும்சுவர்! புதிய பொறுப்பில் வெல்வாரா?


மேலும் படிக்க: Australia vs Scotland 1st T20: டி20.. பவர் ப்ளேவில் மாஸ் காட்டிய டிராவிஸ் ஹெட்.. புதிய சாதனை படைத்தார்