டெஸ்ட் தரவரிசையில் உள்ள முதல் இரண்டு அணிகளான - இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இரண்டாவது பதிப்பில் களம் காண்பது உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் முக்கியம் வாய்ந்ததாக கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஐசிசி நிகழ்வின் இறுதிப்போட்டியில் மோதுவது இதுவே முதல் முறை. இந்த இரு அணிகளும் கடைசியாக 2003 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில்தான் மோதின. அதில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை தோற்கடித்தது. இம்முறை 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7 முதல் ஜூன் 11 வரை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.


கோப்பை வெல்லுமா இந்தியா?


2021இல் முதன்முறையாக நடந்த இந்த நிகழ்விலும் இறுதிப்போட்டியை அடைந்த இந்திய அணி, நியூசிலாந்திற்கு எதிராக தோல்வியடைந்ததால், இரண்டாம் இடத்தைப் பிடித்தது. ஆனால் இந்த முறையும் இறுதிப்போட்டியை அடைந்துள்ள, ரோஹித் ஷர்மாவின் படை கண்டிப்பாக கோப்பையை வென்றாக வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது. பல ஆண்டுகளாக இந்திய அணி ஐசிசி கோப்பை வெல்லவில்லை என்ற வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இது இருக்கும் என்று எதிர்பா்க்கப்படுகிறது.



பாகிஸ்தான் பந்துவீச்சாளருடன் ரோஹித்


இந்த இறுதிப் போட்டிக்கு முன்னதாக, WTC 2021-23 நிகழ்வில் நடந்த போட்டிகளின்போது அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியல் பல ஆச்சரியங்களை புதைத்து வைத்திருப்பதை காணமுடிகிறது. இந்தப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 10 போட்டிகளில் 10 சிக்ஸர்களுடன் 15வது இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி 10 சிக்ஸர்கள் அடித்து ரோஹித் சர்மாவின் இடத்தை பகிர்ந்துள்ளார். தொடக்க வீரர் ஷுப்மான் கில் 7 போட்டிகளில் 8 சிக்ஸர்களுடன் 18வது இடத்தில் உள்ளார். 


தொடர்புடைய செய்திகள்: Odisha Train Accident: 275 பேர் உயிரை பறித்த கோர விபத்து..51 மணி நேர போராட்டம்.. பாலசோர் பகுதியில் மீண்டும் ரயில் சேவை தொடக்கம்


ஆச்சரியமளிக்கும் பட்டியல்


இந்த பட்டியலில் இவர்களுக்கெல்லாம் முன்னதாக ஐந்தாவது இடத்தில் உள்ளார் அக்சர் பட்டேல். அவர் 9 போட்டிகளில் 16 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் விபத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வரும் ரிஷப் பந்த் உள்ளார். வெறும் 12 போட்டிகள் மட்டுமே ஆடியுள்ள அவர், 22 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இந்த பட்டியலில் ஆச்சரியமளிக்கும் விதமாக, பும்ரா 6 சிக்சர்களுடன் முன்னணியில் உள்ளார். அவர் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள லபுஷேனை விட முன்னாள் இருப்பது குறிபபிடத்தக்கது.



அதிக சிக்ஸர் அடித்த டாப் 10 வீரர்கள்



  1. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து): 18 போட்டிகளில் 28 சிக்சர்கள்

  2. ரிஷப் பந்த் (இந்தியா): 12 போட்டிகளில் 22 சிக்சர்கள்

  3. டேரில் மிட்செல் (நியூசிலாந்து): 11 போட்டிகளில் 20 சிக்சர்கள்

  4. ஜானி பேர்ஸ்டோவ் (இங்கிலாந்து): 15 போட்டிகளில் 19 சிக்ஸர்கள்

  5. அக்சர் படேல் (இந்தியா): 9 போட்டிகளில் 16 சிக்ஸர்கள்

  6. தினேஷ் சண்டிமால் (இலங்கை): 10 போட்டிகளில் 15 சிக்சர்கள்

  7. டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா): 17 போட்டிகளில் 15 சிக்சர்கள்

  8. ஷ்ரேயாஸ் ஐயர் (இந்தியா): 10 போட்டிகளில் 14 சிக்ஸர்கள்

  9. அப்துல்லா ஷபீக் (பாகிஸ்தான்): 12 போட்டிகளில் 14 சிக்ஸர்கள்

  10. ஏஞ்சலோ மேத்யூஸ் (இலங்கை): 12 போட்டிகளில் 13 சிக்சர்கள்