இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மூன்று இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதன்படி இந்த பட்டியில்  முதல் ஐந்து இடத்தில் உள்ள யார் யார் இருக்கின்றனர் என்று பார்ப்போம்:


சுப்மன் கில்:


இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 25* போட்டிகள் விளையாடி உள்ளார். அதில், 5 சதங்கள் அடித்துள்ளார். அதேபோல், மொத்தம் 7 அரைசதங்களை விளாசியுள்ளார். 162 பவுண்டரிகள், 31 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 1387 ரன்களை குவித்து இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 208.


பாத்தும் நிஸ்ஸங்கா:



இலங்கை அணி வீரர் பாத்தும் நிஸ்ஸங்கா இந்த பட்டியில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அதன்படி, நடப்பாண்டில் மொத்தம் 27* சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 1108 ரன்கள் குவித்துள்ளார். அதன்படி, மொத்தம் 2 சதங்கள் , 9 அரைசதங்கள் விளாசியுள்ள பாத்தும் நிஸ்ஸங்கா 
 148 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடித்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 104.


ரோகித் சர்மா:


இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 1060 ரன்களுடன் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அதன்படி இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 23 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 2 சதங்களும் 8 அரைசதங்களும் அடித்துள்ளார். இதில் மொத்தம் 109 பவுண்டரிகள் மற்றும் 56 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 131 ரன்கள்.


விராட் கோலி:



இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார். அதன்படி, மொத்தம் 23 சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ள விராட் 1032 ரன்கள் குவித்துள்ளார்.


இதில் 4 சதங்கள் மட்டும் 6 அரைசதங்கள் அடங்கும். மேலும், 92 பவுண்டரிகள் 21 சிக்ஸர்கள் அடித்துள்ளார். விராட் கோலியின் அதிகபட்ச ஸ்கோர் 166* ரன்கள்.


டேரில் மிட்செல்:


இந்த ஆண்டில் 1000 ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பவர் நியூசிலாந்து அணி வீரர் டேரில் மிட்செல். மொத்தம் 23 சர்வதேச ஒரு நாள் போட்டிகளை இந்த ஆண்டில் விளையாடி உள்ள இவர் மொத்தம் 998 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதங்கள், 3 அரைசதங்கள் அடங்கும். 75 பவுண்டரிகளும், 27 சிக்ஸ்ர்களும்  அடித்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 130.


மேலும், இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் மற்றும் ஏழாவது இடத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் இருக்கின்றனர். எட்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்க வீரர் மார்க்கரம் மற்றும் ஒன்பதாவது இடத்தில் ஐக்கிய அரபு நாட்டைச் சேர்ந்த வீரர் ஆசிப் கானும் பத்தாவது இடத்தில் தென்னாப்பிரிக்க வீரர் குயின் டன் டி காக் ஆகியோர் இருக்கின்றனர்.


 


 


மேலும் படிக்க: Virat Kohli Record: ஒரே ஆண்டில் 1000 ரன்கள்! சச்சின் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்த கோலி!