Rohit Sharma: ரோஹித் ஷர்மாவின் செயல்பாடுகள் ஒரு கேப்டனாக ஒரு நாள் போட்டிகளில் எப்படி இருந்தது என்பதை பார்ப்போம்.

இந்திய கிரிக்கெட் அணி வரும் அக்டோபர் 19 ஆம் தேதி தொடங்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் அக்டோபர் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அந்த வகையில் இதுவரை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் ஷர்மாவை நீக்கி விட்டு அவரை சாதாரண வீரராக அறிவித்தது பிசிசிஐ.

Continues below advertisement

அதே நேரம் இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். மேலும், துணை கேப்டனாக ஸ்ரேயாஷ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கேப்டனாக ரோஹித் ஷர்மா எப்படி?

இது பெரும்பாலான ரசிகர்களிடம் விமர்சனத்தை எழுப்பியுள்ள நிலையில் ஒரு நாள் போட்டிகளில் ரோஹித் ஷர்மாவின் செயல்பாடுகள் ஒரு கேப்டனாக ஒரு நாள் போட்டிகளில் எப்படி இருந்தது என்பதை பார்ப்போம். அதாவது ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சியில் இந்திய அணி மொத்தம் 56 போட்டிகளில் விளையாடியுள்ளது.  இதில் 42 வெற்றிகளை ஒரு கேப்டனாக இருந்து இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்துள்ளார் ரோஹித் ஷர்மா.

Continues below advertisement

ஒரு டை மற்றும் ஒரு முடிவு இல்லாதது ஆகியவையும் இதில் அடங்கும். குறைந்தது 50 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்தவர்களில், மேற்கிந்திய தீவுகள் அணிக்காக கிளைவ் லாயிட் மட்டுமே அதிக வெற்றி சதவீதத்தைக் கொண்டுள்ளார் (76.2%). ரோஹித் 75%, விராட் கோலி  68.4% மற்றும் எம்.எஸ். தோனி  55% ஐ கொண்டுள்ளனர். அந்த வகையில் ஒரு நாள் போட்டியில் வெற்றிகரமான கேப்டனாக இருந்துள்ளார் ரோஹித் ஷர்மா.

ரோஹித் ஷர்மா தலைமையில் இந்தியா 2018 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஆசியக் கோப்பைகளையும், 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றது, அதே நேரத்தில் 2023 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.