இந்திய ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளப்பியுள்ளன.
இந்திய அணி அறிவிப்பு:
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது, இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கபட்டது. ஒரு நாள் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ரோகித் சர்மாவுக்கு பதிலாக கில்லுக்கு கேப்டன்சி கொடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது.
ரோகித் சர்மா சாதனை:
இந்திய அணியின் கேப்டனாக 2021 ஆண்டு முதல் செயல்பட்டு வந்த ரோகித் 56 ஒருநாள் போட்டிகளில் 42 வெற்றியும் 12 தோல்வியும் ஒரு ஆட்டத்தில் முடிவும் இல்லை. இந்திய அணியின் பொறுப்பு கேப்டனாக 2018- ஆசியக்கோப்பையும், 2023 ஆசியக்கோப்பையும் வென்று கொடுத்தார்.
இந்திய அணியின் 11 ஆண்டுக்கால ஐசிசி கோப்பை தாகத்தையும் ரோகித் சர்மா தீர்த்து வைத்தார். 2024 டி20 உலககோப்பையையும் 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையும் வென்று கொடுத்தார். 2023 ஒரு நாள் உலகக்கோப்பை மட்டும் நூழிலையில் மிஸ் ஆனாது.
ஐசிசி தொடர்களில் மொத்தம் 25 போட்டிகளில் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா 24 போட்டிகளில் வென்று கொடுத்தார், அப்படி பல வெற்றிகளை தேடிக்கொடுத்த கேப்டனை ஏன் கேப்டன்சி பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
கம்பீர் அரசியல் காரணமா?
கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கபட்டதிலிருந்து ஏகப்பட்ட சர்ச்சைகள் இந்திய அணியை சுற்றி வலம் வருகிறது, தனக்கு பிடித்தவர்களை பயிற்சிக்குழுவில் சேர்த்தது, தனக்கு விருப்பமான வீரர்களை அணியில் தேர்ந்தெடுப்பது என அவரை சுற்றி வலம் வந்தன.
இதன் காரணமாக மூத்த வீரர்கள் பலர் அணியில் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது, விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் என மூத்த டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றது என சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் தற்போது கேப்டன்சியில் எந்த வித முன் அனுபவமும் இல்லாத சுப்மன் கில்லுக்கு கேப்டன்சி பொறுப்பு வழங்கப்பட்டது சரியில்லை என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிசிசிஐ சொன்னது என்ன?
ஒருநாள் உலகக் கோப்பை அணியில் ரோஹித் சர்மாவின் இடம் உறுதி செய்யப்படாத நிலையில், இந்திய கிரிக்கெட்டின் நலனுக்காக ஒரு பெயரைக் குறிப்பிடுவது நல்லது. புதிய கேப்டன், பழக அவருக்கு போதுமான நேரம் கொடுங்கள். இந்தியா ரோஹித்தையே தொடர்ந்திருந்தால், அவர் அணியில் இடம் பெறத் தவறியிருந்தால், உலகக் கோப்பையில் இந்தியா ஒரு அனுபவமற்ற கேப்டனுடன் இருந்திருக்கும்.