MS Dhoni:  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் உலகக்கோப்பை நாயகனுமான மகேந்திரசிங் தோனி தற்போது ஐபிஎல் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கும் அவ்வப்போது ஏதாவது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் வெளியில் வரும்போது மட்டும்தான் பார்க்க முடிகிறது. இதற்கிடையில் இவர் என்ன செய்கிறார் என்பது குறித்து யாருக்குமே தெரிவதில்லை. எப்போதாவது இவராகவே தனது தோட்டத்தில் டிராக்டர் ஓட்டும் வீடியோவோ, அல்லது யாராவது எங்காவது இவரைப் பார்த்ததாக வீடியோ பதிவிட்டால் தான் தோனி குறித்த செய்திகள் வலம் வரும். 

Continues below advertisement


தற்போது இதேபோல், ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் தோனியின் தீவிர ரசிகர் ஒருவர் தோனியைப் பார்ப்பதற்காக ராஞ்சியில் உள்ள அவரது வீட்டிற்கே சென்று வாசலில் காத்துக்கொண்டு இருந்துள்ளார். இவருடன் இவரது நண்பனும் இருந்துள்ளார். இவர்கள் சென்று நீண்ட நேரம் காத்திருந்த பின்னர் தோனியைப் பார்த்துள்ளனர். அதனை வீடியோவும் எடுத்துள்ளனர். அந்த வீடியோவில் தோனி தனது இரு சக்கர வாகனத்தில் வெளியில் எங்கோ ட்ரிப் அடித்துவிட்டோ அல்லது, வேறு எங்கோ சென்று விட்டோ வீடு திரும்பியுள்ளார். இவர்களைப் பார்த்த தோனி பைக்கை நிறுத்தாமல் உள்ளே சென்றுவிட்டார். ஆனாலும் ரசிகர்கள் தோனியுடன் பேசமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை அவரை பார்த்துவிட்ட மகிழ்ச்சியில் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இதனை தோனியின் ரசிகர்கள் லைக்குகளால் நிரப்பியுள்ளனர். 


 






சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடத்தொடங்கிய பிறகு தோனிக்கும், தமிழ்நாட்டிற்குமான நெருக்கம் அதிகளவில் ஏற்பட்டது. விளையாட்டுத்துறை மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து வந்த தோனி சென்னையை தலைமையிடமாக கொண்டு திரைப்பட நிறுவனம் ஒன்றையும் தொடங்கி, தனது முதல் தயாரிப்பில் படத்தையும் கடந்த மாதம் ரிலீஸ் செய்தார். 


இவர்களது தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் எல்.ஜி.எம். என்ற படம் வெளியாகி ஓடியது.  இந்த நிலையில், விளம்பரங்களில் நடித்து வந்த தோனி திரைப்படங்களில் நடிக்கவும் ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி கொண்டே இருந்தது. கடந்த மாதம் இதுதொடர்பாக பேசிய தோனியின் மனைவி ஷாக்சி நல்ல கதை மற்றும் கதாபாத்திரம் அமைந்தால் தோனி நடிப்பது குறித்து பரிசீலிப்பார் என்று கூறியிருந்தார்.


இந்த நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக நடிகர் தோனி நடிகர் விஜய் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்து வரும் தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.